பீரியட் டிராமாவான சீதாராமன் படத்தின் வெளியீட்டு தேதியை பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி படம் திரைக்கு வருகிறது. வைஜெயந்தி மூவிஸ்தயாரித்துள்ள இதை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் ராமாவாகவும் மிருணால் தாக்கூர் சீதாவாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ஆஃபரின் என்ற கேரக்டரில் ராஷ்மிக்கா தோன்றுகிறார்.
அஸ்வினி தத் தயாரித்துள்ள சீதாராமன் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், தருண் பாஸ்கர், சத்ரு, பூமிகா சாவ்லா, ருக்மணி விஜயகுமார், சச்சின் கெடேகர், முரளி சர்மா மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.