அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் 3 பாலிவுட் நடிகைகள் உள்பட 5 பேர் ஹீரோயின்களாக நடிக்க உள்ளார்கள் அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அட்லீ இயக்கும் இந்தப் படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. இந்தப் படத்தில் 5 நாயகிகள் நடிக்கிறார்கள். இதில் 3 பேர் பேர் பாலிவுட் நடிகைகளாம். ஒருவர் வெளிநாட்டு நாயகியாம். இந்தப் படம் தற்போது AA22xA6 என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம்.
24
அல்லு அர்ஜுனுக்கு இத்தனை வேடங்களா?
ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கிய அட்லீ, இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்துள்ளார். AA22xA6 படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஒன்று ஹீரோ, மற்றொன்று வில்லன். மூன்றாவது வேடம் அனிமேஷன் கதாபாத்திரம். இந்தப் படத்திற்காக அட்லீ சர்வதேச விஎஃப்எக்ஸ் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அல்லு அர்ஜுன் தனது கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவர் தனது உடற்தகுதி, ஸ்டைலிங் மற்றும் தோற்றத்தில் கவனம் செலுத்துகிறார்.
34
அல்லு அர்ஜுன் படத்தில் 5 நாயகிகள்
அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தில், 5 முன்னணி நாயகிகளும் நடிக்க உள்ளார்களாம். அவர்கள் யார் யார் என்கிற அப்டேட் கசிந்துள்ளது. தீபிகா படுகோன், ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர கிங்டம் பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸும் நடிக்க வாய்ப்புள்ளது. இவர்களைத் தவிர, இன்னொரு நாயகியும் நடிக்கிறார். அவர் ஒரு பாப் ஸ்டார் அல்லது ஹாலிவுட் நடிகையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் AA22xA6 படம் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. இது டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்ட சயின்ஸ் பிக்சன் படம். ஹாலிவுட் படங்களைப் போல, இதன் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026ல் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மட்டும் ரூ.300 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.