தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா கிருஷ்ணன் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார். பொன்னியின் செல்வன் மற்றும் லியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு, தற்போது தக் லைஃப் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகிவிட்டார் திரிஷா. தக் லைஃப் படத்தில் தன்னைவிட 30 வயது மூத்த நடிகரான கமல்ஹாசன் உடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார் திரிஷா. இப்படி படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார் திரிஷா. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
24
விஜய்யுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய திரிஷா
நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதுதவிர விஜய்யின் கோட் படத்திலும் திரிஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். குருவி படத்துக்கு பின் சுமார் 15 ஆண்டுகள் விஜய்யுடன் இணைந்து பணியாற்றாமல் இருந்த திரிஷா, லியோ மூலம் மீண்டும் இணைந்தார். அந்த சமயத்தில் தான் நடிகர் விஜய்யும் அவர் மனைவி சங்கீதாவும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக செய்தி வெளியான நிலையில், விஜய்யுடம் திரிஷாவும் காதலிப்பதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக விஜய் பிறந்தநாளுக்கு விஜய்யோடு ஜோடியாக சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தினார் திரிஷா.
34
திரிஷா - ராணா டகுபதி காதல்
நடிகை திரிஷா உடன் காதல் சர்ச்சையில் சிக்கிய மற்றொரு நடிகர் ராணா டகுபதி. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்பட்டாலும் அவர்கள் இருவருமே அதை பொது வெளியில் அறிவித்ததில்லை. இருப்பினும் அவர்கள் இருவரின் நெருக்கமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஒரு கட்டத்தில் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் பரவின. ஆனால் சில காரணங்களால் இவர்கள் காதல் கைகூடவில்லை.
நடிகை திரிஷாவுக்கு கடந்த 2015-ம் ஆண்டு வருண் மணியன் என்கிற தயாரிப்பாளருடன் திருமணம் நிச்சயம் ஆனது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் திருமணம் நிச்சயத்தோடு நின்றுபோனது. இதற்கான காரணத்தையும் திரிஷா வெளியிட்டிருந்தார். அதன்படி வருண் மணியன் திருமணத்துக்கு பின்னர் தன்னை நடிக்கக் கூடாது என சொன்னதாகவும், அது பிடிக்காததால், அவரின் உறவை முறித்துக் கொண்டதாக திரிஷாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.