இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஹல்டி எனப்படும் மஞ்சள் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் மஞ்சள் பூசி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அதியா ஷெட்டி திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு வைக்கும் வைபவத்தின் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.