நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, 'கஜினிகாத்' படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.
ஹைதராபாத்தில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'காப்பான்' படத்தில் இணைந்து நடித்த நிலையில், தற்போது 'டெடி' படத்தில் நடித்துள்ளனர்.
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம், மார்ச் 12 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று ஆர்யா - சாயிஷா ஜோடி இரண்டாவது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இவர்கள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் ரசிகர்கள் பலரும், இந்த நட்சத்திர ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.