பிரபல இயக்குனர் ஹரி - அருண் விஜயின் முதல் கூட்டணியான யானை படத்தில் ராமச்சந்திர ராஜு, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராஜேஷ், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா, அம்மு அபிராமி, யோகி பாபு என பலரும் முக்கியவேடங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்க ஒளிப்பதிவு கோபிநாத்தும், படத்தொகுப்பை ஆண்டனியும் செய்திருந்தனர்.