Published : Aug 15, 2022, 02:56 PM ISTUpdated : Aug 15, 2022, 03:00 PM IST
அருண் விஜய் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த தொடரும் ஆகஸ்ட் 19-ம் தேதி தான் வெளியாகவுள்ளது. அதே தேதியில் யானை ஓடிடி பிரிமியரில் வெளியாவது ரசிகர்களுக்கு டபுள் தமக்காவா அமைந்துள்ளது.
அருண் விஜயின் சமீபத்திய வெளியிடான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
உலக அளவில் சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள யானை படத்தை ஹரி இயக்கியுள்ளார். நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு இயக்குனரின் படைப்பாக இந்த படம் வெளியானது. அதோடு ஹரி மற்றும் அருண் விஜயின் முதல் கூட்டணி யானை படம் தான்.
25
YAANAI
முன்னதாக சிங்கம் 3 படத்தை தொடர்ந்து அருவ யானை ஆகிய இரு படங்களின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ஹரி. ஆனால் பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு யானை படத்தை தனது மைத்துனன் அருண் விஜயை வைத்து இயக்கி முடித்து விட்டார்.
இதற்கிடையே யானை படத்தில் சூர்யா ஒப்பந்தமாக மறுத்ததன் காரணமாகவே அருண் விஜய் வைத்து படத்தை ஹரி இயக்கினார் என ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் இது குறித்து மறுப்பு தெரிவித்திருந்த இயக்குனர் அருவா படத்தின் மீண்டும் சூர்யா வுடன் கைகோர்க்க உள்ளதாகவும், சிறிது காலம் தாமதமாகலாம் எனவும் கூறியிருந்தார்.
35
YAANAI
இந்நிலையில் படம் வெளியாகி 18 நாட்கள் கழித்து தற்போது ஓடிடிக்குவரவுள்ளது. அதன்படி இம்மாதம் 19 - ம் தேதி யானை படம் ஓடிடி தளத்தில் வெளியாகும். இந்த அறிவிப்பை என அருண் விஜய் வெளியிட்டிருந்தார். யானை படத்தில் அருண் விஜயுடன் ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி வி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
முதலில் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. பின்னர் ஒத்திவைப்புகளுக்குப் பிறகு ஒரு வழியாக கடந்த ஜூலை ஒன்றாம் தேதி படம் வெளியானது. விநியோக சிக்கல் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனதாக தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது அருண் விஜய் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த தொடரும் ஆகஸ்ட் 19-ம் தேதி தான் வெளியாகவுள்ளது. அதே தேதியில் யானை ஓடிடி பிரிமியரில் வெளியாவது ரசிகர்களுக்கு டபுள் தமக்காவா அமைந்துள்ளது.
55
YAANAI
தற்போது அருண் விஜய் பார்டர் படத்தின் வெளியிட்டுக்காக காத்திருக்கிறார். அதோடு ஏஎல் விஜயுடன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.