அஜித்துக்கே டஃப் கொடுக்கும் அருண் விஜய்! 30 வருட சினிமா வாழ்க்கையில் சேர்த்த சொத்து இதுதான்!

Published : Jul 08, 2024, 04:01 PM IST

அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் அருண் விஜய் 30 வருடமாக சினிமாவில் தனது இடத்தைத் தக்க வைத்து வைருகிறார். சினிமா குடும்பத்தில் இருந்து வந்த அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

PREV
17
அஜித்துக்கே டஃப் கொடுக்கும் அருண் விஜய்! 30 வருட சினிமா வாழ்க்கையில் சேர்த்த சொத்து இதுதான்!
Arun Vijay Assets

கோலிவுட் திரையுலகில் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவராகத் திகழும் அருண் விஜய், ஃபிட்டான உடலுக்குப் பெயர் பெற்றவர். 1995 இல் வெளியான சுந்தர் சியின் முறை மாப்பிள்ளை படத்தில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1998 இல் வெளியான துள்ளித் திரிந்த காலம் அவரது முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

27
Arun Vijay childhood

பின்னர், அருண் தனது சாக்லேட் பாய் இமேஜை உதறிவிட்டு, நடிகராக தனது திறமையை நிரூபித்தார். அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக மாறிய அவரது தைரியமான நடிப்பு அதிகம் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் குறைவான படங்களில் தான் நடித்துள்ளார். சில படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், மற்றவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை.

 

37
Actor Arun Vijay

அருண் விஜய் தற்போது தனது மனைவி ஆரத்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் உள்ள ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு நிலவரப்படி அருண் விஜய் வசம் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது.

47
Arun Vijay Bikes

கார் பிரியரான அருணிடம்  மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட உயர் ரக கார்கள் உள்ளன. அவர் BMW 7 சீரிஸ் காரையும் வைத்திருக்கிறார். அதன் விலை சுமார் ரூ. 1.65 கோடி. ரூ.46.64 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் ஜே.எல்.ஆர். காரும் இவரிடம் உள்ளது. போர்சே, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும் இவரிடம் உள்ளன.

57
Arun Vijay Cars

அஜித் போல அருண் விஜய்யும் ஒரு பைக் பிரியர். வீட்டிலேயே ஒரு பைக் கேரேஜ் வைத்திருக்கிறார். இவரிடம் சுமார் 25 லட்சம் மதிப்பிலான சுசுகி ஹையபுசா, ராயல் என்ஃபீல்டு, யமஹா ரே உள்ளிட்ட பைக்குகள் உள்ளன.

67
Actor Arun Vijay Net Worth

இன் சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். இதன் மூலம் திறமையான இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அறிவழகன் இயக்கிய குற்றம் 23 (2017) அருண் விஜய் நிறுவனம் தயாரித்த முதல் படம்.

77
Arun Vijay Family

கார்த்திக் நரேன் இயக்கிய 'மாஃபியா: சாப்டர் 1' இல் அருண் விஜய் கடைசியாக நடித்தார். அதை லைகா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் அல்லிராஜா சுபாஸ்கரன் அதைத் தயாரித்தார். இப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, அந்தப் படத்தின் 2ஆம் பாகத்திலும் நடிக்கிறார். அதையும் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இது தவிர பார்டர், சினம், அக்னி சிறகுகள், யானை போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories