
நடிகர் அருள்நிதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் டிமான்டி காலனி 2. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. உண்மை கதையை மையமாக வைத்து, புனையப்பட்ட கதைகளத்தோடு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படம், எதிர்பாராத ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் ரசிகர்களை சீட் நுனியில் அமர வைத்தது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதாவது சென்னையில் இருக்கும் டிமான்டி காலனி என்கிற இடத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனையில் இருக்கும், செயினை எடுக்க நினைக்கும் சிலருக்கு ஏற்பட்ட அகால மரணம் குறித்தும், செயினை எடுப்பவர்கள் உயிரை பறிக்கும் ஜான் டிமான்டி குறித்தும் இந்த படம் பேசி இருந்தது.
இப்படம் வெளியாகி சுமார் 7 ஆண்டுகள் ஆன பின்னர், அருள்நிதியை வைத்து இப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி உள்ளார், இயக்குனர் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இரண்டாவது பாகம், ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை தூண்டியது மட்டும் இன்றி இப்படத்தின் ட்ரெய்லர், டீசர், போன்றவைக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
'தங்கலான்' என்றால் உண்மையில் என்ன அர்த்தம் தெரியுமா? விக்ரம் கொடுத்த விளக்கம்!
அதேபோல் வழக்கமான டிமான்டி காலனி 2 படத்தை இயக்குனர் ஹாலிவுட் தரத்தில் இயக்கி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் 'தங்கலான்' படத்திற்கு போட்டியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள 'டிமான்டி காலனி 2' படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், சஞ்சனோ காலித், போன்ற பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, குமரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
BTG யூனிவர்சல் நிறுவனமும், வைட் நைட் என்டர்டெயின்மென்ட் ஞானவேல் பட்டறை இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் குறித்து ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனம் இதோ...
முதல் பாதி நிறைவுடன் இரண்டாவது பாகம் தொடங்க படுகிறது. முதல் பாதி அருமை. எதிர்பாராத இன்டெர்வல் காட்சி. சஸ்பென்ஸ் நிறைந்த இரண்டாவது பாகம் என இந்த படம் குறித்து ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகரின் விமர்சனத்தில், "டிமான்டி காலனி 2 இயக்குனரின் வலுவான திரைக்கதையாக முதல் பாகத்துடன் இணைத்துள்ளது பாராட்ட தக்கது. அருள்நிதியின் கதை தேர்வு நெருப்பாக உள்ளது. முதல் பாகத்தில் இருந்து கதை தொடர்ந்தாலும், அருள்நிதி எப்படி உயிர்பிழைக்கிறார் என்பது போன்ற காட்சிகள் தரமாக உள்ளது. பிரியா பவானி ஷங்கர் ராக்கிங் ரோலில் நடித்துள்ளர். இதில் காட்டப்பட்ட சடங்குகள் போன்றவை எதிர்பார்ப்பை கூடுகிறது என தெரிவித்துள்ளார்.
இன்னொரு ரசிகர், டிமான்டி காலனி முதல் பதில் சிறப்பாக உள்ளது என்றும், திகில் நிறைந்த சிறந்த திரைக்கதை. பிரியாபவானிசங்கர் ஆணிவேர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருள்நிதி மிகவும் மேம்பட்டுள்ளார்.என கூறியுள்ளார். தொடர்ந்து இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?