
பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற விக்ரமுக்கு இன்று வெளியாகியுள்ள தங்கலான் படம் ஆஸ்கர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணில் நடிகர்களில் வலம் வருபவர் விக்ரம்.
மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோருடன் இணைந்து விக்ரம் நடித்துள்ள தங்கலான் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் உடல் எடையை கூட்டி, குறைத்து நடிக்கும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர். சிறந்த படத்திற்கான உதாரணங்களாக ஐ, பிதாகமன், தெய்வமகள், சேது உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.
இதுவரையில் விக்ரமிற்கு தேசிய விருது மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்த என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் காலூன்றி விக்ரம் இன்று கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார். தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம், உல்லாசம், சேது, காசி, ஜெமினி, சாமி, பிதாமகன், அருள், அந்நியன், தெய்வ மகள், ஐ, பொன்னியின் செல்வன் – 1, பொன்னியின் செல்வன் – 2 என்று பல படங்களில் நடித்துள்ள விக்ரம் இன்று தனது தங்கலான் படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார்.
உடலை வருத்தி கதைக்கும், காட்சிக்கும் ஏற்ப தனது நடிப்பை வெளிப்படுத்திக் காட்டக் கூடியவர் விக்ரம். அப்படி ஒரு படத்தை தான் இன்று தனது ரசிகர்களுக்காக கொடுத்திருக்கிறார். தங்கலான் படத்தில் ஒரு சண்டைக் காட்சியின் போது அவரது விலா எலும்பு நொறுங்கிவிட்டதாக இயக்குநர் பா ரஞ்சித் தங்கலான் பட இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.
அந்தளவிற்கு அதிக ஈடுபாடு கொண்டு நடித்திருக்கிறார். அதோடு எந்த ஒரு மாஸாக ஹீரோவாக இருந்தாலும், வெயில், கோவணம் கட்டிக் கொண்டு, மண் சகதியோடு நடிப்பது எல்லாம் சர்வ சாதாரணம் கிடையாது. அந்தளவிற்கு டெடிகேஷனுடன் விக்ரம் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணம் விருதுகளையும் எல்லாம் தாண்டி, ரசிகர்களுக்கு சிறந்த படம் கொடுக்க வேண்டும் என்பது தான். ஒரு நடிகருக்கு கதையும், காட்சியும் தான் விருதுகளை அள்ளிக் கொடுக்கும். அப்படி தங்கலான் படம் அமைக்கப்பட்ட விதம், கதை, காட்சிப் பொருள், நடிப்புத் திறமை என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது விக்ரமுக்கு சிறந்த நடிகருக்காக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கி ஞானவேல் ராஜா உடன் இணைந்து தங்கலான் படத்தை தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் சூனியக் காரியாக நடித்துள்ளார். படமும், காட்சியும் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.
தனது பழங்குடியின மக்களுடன் பழங்குடியின தலைவனான தங்கலான் (விக்ரம்), தங்கத்தை தேடும் வேலையில் இறங்குகிறார். அப்போது சூனியக்காரியான ஆரத்தியின் (மாளவிகா மோகனன்) கோபத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து தங்களது முழு பலத்துடன் ஆரத்தியை எதிர்த்து புறப்படுகிறார் தங்கலான்.
இதுவரையில் பிதாமகன் மட்டுமே விக்ரமுக்கு தேசிய விருது வென்று கொடுத்துள்ளது. ஆனால், அவருக்கு ஆஸ்கர் பெற்று கொடுக்கும் படமாக தங்கலான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவிற்கு பெருமை தேடித் தரக் கூடிய ஒரு படமாக தங்கலான் இருக்கும்.
இதற்கு முன்னதாக பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வந்த பரதேசி முற்றிலும் வேறுபட்ட படம். இதே போன்று பழங்குடியின மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் பரதேசி படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.