ரஜினி, கமலுக்கு டஃப் கொடுத்த ராமராஜன் வீழ்ந்தது எப்படி?

First Published | Aug 15, 2024, 9:15 AM IST

மதுரையில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்த ராமராஜன், தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தார். எம்.ஜி.ஆரை போலவே மக்கள் செல்வாக்கு பெற்ற ராமராஜன், அரசியலிலும் ஈடுபட்டு எம்.பியாகவும் பணியாற்றினார்.

Ramarajan

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகர் ராமராஜன். அரசுப் பள்ளியில் படித்த முடித்த அவருக்கு தியேட்டரில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் பணி கிடைத்தது. பின்னர் ஆபரேட்டார், கேஷியர் என படிப்படியாக உயர்ந்தார் ராமராஜன். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ராமராஜன், எம்.ஜி.ஆரின் படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் பார்க்கக்கூடியவர். 

Ramarajan

எம்.ஜி.ஆரை போலவே பெரிய நடிகராக வர வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார் ராமராஜன். ஆனால் அவருக்கு சினிமாவில் அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் புரொடக்ஷன் பாயாக சேர்ந்த அவருக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ராமநாராயணிடம் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் 25 படங்களில் அவரிடம் பணியாற்றினார் ராமராஜன். 

Tap to resize

Ramarajan

பின்னர் ஒரு சில படங்களை இயக்கிய அவர் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். ராமராஜனின் கள்ளம் கபடமற்ற பேச்சு, அவரின் இயல்பான நடிப்பு, கிராமத்து சாயல் ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது. இதனால் அவருக்கு தனி ரசிக கூட்டம் உருவாகியது. குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக மாறினார். அவரின் பல படங்கள் வெள்ளிவிழா படங்களாக மாறியது. அவரின் படங்களுக்கு இளையராஜாவின் இசையும் முக்கிய காரணம். ரஜினி, கமலுக்கு இணையாக ரசிகர் மன்றங்களும் உருவாகியது. 

Ramarajan

குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக மாறினார். அவரின் பல படங்கள் வெள்ளிவிழா படங்களாக மாறியது. அவரின் படங்களுக்கு இளையராஜாவின் இசையும் முக்கிய காரணம். ரஜினி, கமலுக்கு இணையாக ரசிகர் மன்றங்களும் உருவாகியது. மண் மனம் மாறாத கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் நடித்த ராமராஜன் மக்கள் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். 

ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?

Ramarajan

தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், ராசாவே உன்ன நம்பி, ரயிலுக்கு நேரமாச்சு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து ராமராஜன் நடித்த கரகாட்டகாரன் படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இதை தொடர்ந்து என்ன பெத்த ராசா, மனசுக்கேத்த மகராசா, அன்புக்கட்டளை, தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
1989 முதல் 1991 வரை கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருந்தார் ராமராஜன். 1987 இல் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Ramarajan

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த ராமராஜன் எம்.பியாகவும் இருந்தார். எம்.ஜி.ஆர் மீது பற்று கொண்ட ராமராஜன் அவரின் மறைவுக்கு பின் ஜெயலலிதா அணியில் இணைந்தார். 1998-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் மத்தியில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததால் 13 மாதங்களில் தனது எம்.பி பதவியை இழந்தார். 
இதனிடையே திரை வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலுமே அடுத்தடுத்து பல சோகங்களை சந்தித்தார். திருமணமான 13 ஆண்டுகளுக்குப் நளினியும் ராமராஜனும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

Ramarajan

மேலும் தமிழ் சினிமாவும் பல மாற்றங்களை சந்தித்து வந்தது. சினிமாவில் அவரின் டிமாண்டும் குறைய தொடங்கியது. ஆனால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும் என்று பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ராமராஜனை அணுகினர். ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என உறுதியாக இருந்த அவர் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார் ராமராஜன். இதுவே அவரின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்... தங்கலான் விக்ரம் கொடுத்த தரமான ஹிட் படங்கள் இதோ

Ramarajan

2000களின் தொடக்கத்தில் இருந்து வீழ்ச்சியை சந்தித்தார். அவரின் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் 2012-ம் ஆண்டு மேதை என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த படமும் போதிய வரவேற்பை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாமானியன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. ஹீரோவாக மட்டுமே 45 படங்களில் தொடர்ந்து அவர் நடித்துள்ளார் ராமராஜன். 

Latest Videos

click me!