'தங்கலான்' என்றால் உண்மையில் என்ன அர்த்தம் தெரியுமா? விக்ரம் கொடுத்த விளக்கம்!
தங்கலான் திரைப்படம் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகர் விக்ரம் பதிலளித்துள்ளார். தங்கலான் என்றால் என்ன, படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
Thangalaan Release:
சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் காம்போவில் முதல் முறையாக வெளியாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இன்று சுமார் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம், ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
Vikrams Thangalaan Budget:
இந்த படத்தை, சுமார் 100 முதல் 150 கோடி பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார் கே.இ.ஞானவேல் ராஜா. இணை தயாரிப்பாளராக பா.ரஞ்சித்தும் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.
Thangalaan Real Meaning:
இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சின் போது ரசிகர்கள் கேட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு விக்ரம் பதிலளித்துள்ளார். அதாவது 'தங்கலான்' படம் குறித்து பார்வையாளர்கள் மத்தியில் இது எந்த வகையான படம் என்றும், தங்கலான் என்பதன் அர்த்தம் என்ன? என்று சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
Thangalaan What Type of Story:
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த விக்ரம் " 'தங்கலான்' என்பது ஒரு பழங்குடியினரின் பெயர். அந்த இனத்தின் தலைவன் தான் தங்கலான் அதாவது (விக்ரம்). அதனால்தான் இப்படத்திற்கு அதே பெயர் வைக்கப்பட்டது. இந்த கதை தங்கச் சுரங்கத்தைச் சுற்றி நடப்பதால், இது கேஜிஎஃப் உடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்கும், KGF படத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இருக்காது. இந்த கதையை எந்த ஒரு ஜார்னரிலும் பிரித்து நம்மால் பார்க்க முடியாது. ஆனால் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருக்கும் என விக்ரம் கூறியுள்ளார்".