Published : Sep 11, 2024, 09:07 AM ISTUpdated : Sep 11, 2024, 09:43 AM IST
Theatre and OTT release Movies : நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் தியேட்டரில் சக்கைபோடு போட்டு வரும் நிலையில், இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. பொதுவாக விஜய், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் அதற்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாது. அப்படி தான் கோட் படம் கடந்த வாரம் எந்தவித போட்டியும் இன்றி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 13-ந் தேதி அதற்கு போட்டியாக ரிலீசாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.
26
ARM
ஏ.ஆர்.எம்
மலையாளத்தில் புதுமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கத்தில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ஏ.ஆர்.எம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டு செப்டம்பர் 12-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கின்றனர். தமிழ் நாட்டில் கோட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த வாரம் நேரடி தமிழ் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், அதற்கு போட்டியாக ஏ.ஆர்.எம் படம் மட்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
36
Goli Soda Rising
கோலிசோடா ரைஸிங்
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தபடம் கோலிசோடா. இப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில், அப்படத்தின் அடுத்த பாகத்தை கோலிசோடா ரைஸிங் என்கிற பெயரில் எடுத்துள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். இது வெப் தொடராக உருவாகி இருக்கிறது. இதில் சேரன், புகழ், ஷியாம் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கோலிசோடா ரைஸிங் வெப் தொடர் வருகிற செப்டம்பர் 13-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன திரைப்படம் ரகு தாத்தா. சுமன் குமார் இயக்கியிருந்த இப்படம் டிமாண்டி காலனி 2 மற்றும் தங்கலான் படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆனதால் போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் பிளாப் ஆனது. இந்த நிலையில், இப்படம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.
56
NOVP
நண்பன் ஒருவன் வந்த பிறகு
தமிழில் அனந்த் ராம் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இப்படத்தில் யூடியூபர் இர்பான், நடிகை பவானி ஸ்ரீ, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை வருகிற செப்டம்பர் 13-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். இப்படம் ஆஹா தமிழ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.
66
OTT release Movies
மற்ற மொழி ஓடிடி ரிலீஸ் படங்கள்
மலையாளத்தில் தலவன் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. தெலுங்கில் மிஸ்டர் பச்சன், Aay ஆகிய படங்கள் நெட்பிளிக்ஸிலும், பெஞ்ச் லைஃப் சோனி லிவ் தளத்திலும், கமிட்டி குரோலு ஈடிவி வின் தளத்திலும் செப்டம்பர் 12-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோல் இந்தியில் கபாலி ரெக்கார்ட்ஸ் செப் 12-ல் ஜியோ சினிமாவிலும், பெர்லின் செப் 13ந் தேதி ஜீ 5 தளத்திலும், செக்டார் 36 நெட்பிளிக்ஸிலும் ரிலீஸ் ஆகிறது.