Arjun Das Heart Broken Love Failure: கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் மிரட்டலான வில்லனாகவும், அநீதி படத்தின் மூலம் சிறந்த நடிகராகவும் உருவெடுத்த அர்ஜுன் தாஸ், தற்போது தனது வாழ்வின் ஒரு கசப்பான பக்கத்தைப் பகிர்ந்துள்ளார். அது என்ன என்று பார்க்கலாம்.
தனது காதல் வாழ்க்கை குறித்துப் பேசிய அர்ஜுன் தாஸ், தனக்கும் ஒரு தீவிரமான காதல் இருந்ததாகவும், அது தோல்வியில் முடிந்தபோது தான் முற்றிலும் உடைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார். "அந்தக் குரலும், தோற்றமும் தைரியமானதாகத் தெரிந்தாலும், மனதளவில் நான் மிகவும் பலவீனமாக இருந்த காலம் அது," என அவர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் என்றாலே ரசிகர்களுக்கு நினைவிற்கு வரும் சில நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் சமீப காலங்களில் அதிக கவனம் பெற்றவர் அர்ஜுன் தாஸ். தனது தனித்துவமான குரல், வித்தியாசமான உடல் மொழி மற்றும் மிரட்டலான நடிப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பேசப்படும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
25
தமிழ் வில்லன்:
அர்ஜுன் தாஸ் தனது திரையுலக பயணத்தை 2012 ஆம் ஆண்டு வெளியான பெருமான் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் ஆரம்பத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்த அவர், பல்வேறு வாய்ப்புகளை தேடி அலைந்தார் அர்ஜுன் தாஸ். கைதி திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அதிக கவனம் பெற்றார். அந்த படத்தில் குறுகிய அளவில் காட்சிகளில் அர்ஜுன் தாஸ் தோன்றினாலும், அவரது குரலும் நடிப்பும் ரசிகர்களின் மனதில் பதிந்தது. அவருக்கின்ற ஒரு தனி இடத்தை கைது திரைப்படத்தில் பதித்துக் கொண்டார்.
35
Arjun Das emotional interview 2026
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த அந்தகாரம் திரைப்படம் அவரது திறமையை வேறு கோணத்தில் வெளிப்படுத்தியதுஅதில் அவர் நடித்த கதாபாத்திரம் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் அவர் கூறிய லைஃப் டைம் செட்டில் மென்ட்ரா என்கிற வசனம் தமிழ் திரையுலகில் மிகவும் வைரலாக பரவியது. அவருடைய கனத்த குரலிலும் அவரது நடிப்பும் தனி ட்ரெண்டிங்கில் இடைப்பிடித்தது. ரசிகர்கள் இன்றும் அந்த வசனத்தை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
விக்ரம் படத்திலும்அவர் நடித்தார். இதனால் அவரது திரையுலக பயணம் மேலும் வலுவடைந்தது. சமீப காலங்களில் போர் மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களிலும் அவர் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டலாக நடித்தாலும், அவரது தோற்றமும் குரலும் காரணமாக பல பெண்களின் கனவுக் கண்ணனாகவும் அவர் ரசிகர்களிடையே பேசப்படுகிறார். அந்த படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தான என் பாடலுக்கு சமூக ஊடகங்களில் அவருக்கு பெரிய ரசிகர் வட்டமும் உள்ளது.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை எப்போதும் ஈர்த்து வருகிறது.முக்கியமாக அர்ஜுன் தாஸும், ப்ரியா வாரியரும் படத்தில் ஒரு இடத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடுவார்கள். ஒரிஜினல் பாடலில் வருவதைப் போல காஷ்டி மகளும் அதே மாதிரியாக அறிந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தனர். அழகாக நடமாடி இருப்பார். இப்ப பாட்டின் மூலம் அர்ஜுன் தாஸ் மிகவும் பிரபலம் அடைந்தார்.
55
இணையத்தில் பதிவிட்ட பதிவு:
இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜுன் தாஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு பதிவு ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில் அவர் காதல் குறித்து ஒரு உணர்ச்சிகரமான கருத்தை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், “ஒருவரை மிகவும் ஆழமாக காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால், அதிலிருந்து ஒருவர் எப்படி முன்னேற முடியும்?” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. இந்த பதிவு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததால் அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த செய்தியை பார்த்து விட்ட ரசிகர்கள் அர்ஜுன் தாஸ் பற்றி கருத்தினை தெரிவித்து வைரல் ஆக்கி வருகின்றனர்.அர்ஜுன் தாஸ் காதல் தோல்வியை சந்தித்தாரா?” என்ற கேள்வி சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே பரவலாக பேசப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.