பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. இதற்கு காரணம் நடிகை ஓவியா தான். அவரின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால், அவருக்கென டுவிட்டரில் ஆர்மியெல்லாம் தொடங்கி அதகளப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒருவரை காட்டப்படும் விதத்தில் தான் அவர்களது பாப்புலாரிட்டியோ, அல்லது நெகடிவ் விமர்சனங்களோ இருக்கும். அந்த வகையில், இந்நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சந்தித்த போட்டியாளர்கள் ஏராளம். உதாரணத்துக்கு முதல் சீசனில் பங்கேற்ற ஜூலியை சொல்லலாம். அவர் அந்நிகழ்ச்சியில் சொன்ன ஒரு பொய் அவருக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அந்நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா, சமீபத்தில் அதிலிருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றார். அதில் ஒளிபரப்பாகும் சூப்பர் மாம் என்கிற ஷோவை அவர் தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளார். சேனல் மாறியதும் அர்ச்சனாவின் மகள் சாரா, பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி உள்ளார்.