விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியருக்கான 10வது சீசன் இந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஷோ நேற்றுடன் முடிவடைந்தது. இதன் பிரம்மாண்டமான பைனல் நேற்று நடைபெற்றது. இந்த பைனலில் பங்கேற்க மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகி இருந்தனர். அந்த ஐந்து பேருமே பெண்கள் தான்.
24
சூப்பர் சிங்கரில் கமல்ஹாசன்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பைனலுக்கு சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டனர். இதில் கமல்ஹாசன் ஏன் ஜோடி மஞ்சக் குருவி பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தியது மட்டுமின்றி, இறுதியாக இந்த சீசனின் வைரல் ஸ்டார் ஸ்ரீவர்ஷினி உடன் மேடையிலேயே அமர்ந்து பாட்டும் பாடி அசத்தினார். கமல்ஹாசனின் இந்த க்யூட்டான செயலை பலரும் வியந்து பார்த்தனர். அதுமட்டுமின்றி இந்த சீசன் வெற்றியாளரையும் கமல்ஹாசன் தான் அறிவித்தார்.
34
சூப்பர் சிங்கர் பைனல்
அதன்படி இறுதிப்போட்டியில் நஸ்ரின் மற்றும் காயத்ரி ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியாக காயத்ரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட நஸ்ரினுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அதுமட்டுமின்றி அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. சாரா மற்றும் ஆத்யா ஆகியோர் 3ம் இடத்தை பிடித்தனர்.
இந்த நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பைனலில் வெற்றியாளராக காயத்ரி அறிவிக்கப்பட்டதும், இரண்டாம் இடம் பிடித்த நஸ்ரின் டைட்டில் ஜெயிக்க முடியாத சோகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இதனைப் பார்த்த ஏ.ஆர்.ரகுமான் மேடையிலேயே அந்தக் குழந்தையை சமாதானப்படுத்தினர். பின்னர் ஏ.ஆர்.ரகுமான் நஸ்ரினிடம், நீ என் மியூசிக் ஸ்கூல்ல படிக்குறியா என கேட்டதும் திக்குமுக்காடி போன நஸ்ரின், ஓகே சொன்னார். நஸ்ரினுக்கு தன்னுடைய இசைப் பள்ளியில் பயில வாய்ப்பளித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.