இசைப்புயலின் கெத்தான சம்பவம்! ஹாலிவுட் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தமிழ் பாட்டு பற்றி தெரியுமா?

Published : Sep 08, 2024, 07:50 AM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் படம் ஒன்றிற்காக தமிழ்பாடலை கம்போஸ் செய்திருக்கிறார், அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

PREV
15
இசைப்புயலின் கெத்தான சம்பவம்! ஹாலிவுட் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தமிழ் பாட்டு பற்றி தெரியுமா?
AR Rahman

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான். பாலச்சந்தர் தயாரிப்பில் வெளிவந்த ரோஜா படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். முதல் படத்திலேயே தன்னுடைய தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ஏ.ஆர்.ரகுமான். இதையடுத்து இவர் இசையமைத்த ஜெண்டில்மேன், ஜீன்ஸ், காதலன், கருத்தம்மா என ஒவ்வொன்றும் வேறலெவல் ஹிட் அடித்தன.

25
Isaipuyal AR Rahman

பின்னர் படிப்படியாக பாலிவுட் படங்களில் இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்தன. அப்படி ஸ்லம்டாம் மில்லியனர் என்கிற ஹாலிவுட் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இந்தியர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றார். அதுவும் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என்கிற பட்டத்துக்கு சொந்தக்காரர் ஆனார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

இதையும் படியுங்கள்... ஏர்போர்ட்டில் நடந்த தள்ளுமுள்ளு? அதிரடியாக கைதான "ஜெயிலர்" விநாயகன் - நடந்தது என்ன?

35
Music Director AR Rahman

அதன்பின்னர் அவர் கோலிவுட்டில் பிசியானாலும் அவ்வப்போது ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2009-ம் ஆண்டு அவர் இசையமைத்த படம் கப்புள்ஸ் ரீட்ரீட். திருமணத்தில் உள்ள குறைகளை கண்டறியும் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படம் தான் இந்த கப்புள்ஸ் ரீட்ரீட். இப்படத்தை பீட்டர் பில்லிங்ஸ்லி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.

45
Couples Retreat

இப்படத்தின் முக்கியமான கட்டத்தில் ஒரு காதல் பாடல் வரும், அந்த காதல் பாடலை தமிழில் கம்போஸ் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பார் ஏ.ஆர்.ரகுமான். குறுகுறு என தொடங்கும் அந்த பாடலுக்கு இசையமைத்தது மட்டுமின்றி அதற்கு பாடல் வரிகளையும் ஏ.ஆர்.ரகுமான் தான் எழுதி இருந்தார். தமிழ்மொழி மீது தீரா காதல் கொண்டவர் ஏ.ஆர்.ரகுமான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆஸ்கர் மேடையிலேயே எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசி அசத்தியவர் ஏ.ஆர்.ரகுமான்.

55
AR Rahman Composed Tamil Song for Hollywood Movie

தமிழ் மொழியை வளர்ப்பதிலும் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. டோலிவுட், பாலிவுட், கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் இதன்மூலம் தமிழை வளர்த்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இதை ஒரு மேடையில் கவிஞர் வாலியே புகழ்ந்து பேசி இருக்கிறார். அதில், கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் இந்த மூன்று இடத்தையும் தன் இசையால் கொள்ளையடிக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஒரு ராபின்ஹுட் என புகழ்ந்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... "பேசியே எல்லாரையும் ஓடவிட போறாப்ல" பிக் பாஸ் சீசன் 8 - களமிறங்குகிறாரா அந்த மாஸ் நடிகர்?

Read more Photos on
click me!

Recommended Stories