இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் சொன்ன சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுபற்றி அவரே விளக்கம் அளித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய பேட்டியில் பேசுகையில், கடந்த எட்டு ஆண்டுகளில் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் குறைந்ததாகவும், படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருப்பதாகவும், சில சமயங்களில் அதற்கு மதரீதியான பரிமாணம் இருக்கலாம் என்றும் கூறியிருந்தார். இது சில தரப்பிலிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போன்றவர்கள் ரகுமானுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
24
விளக்கம் அளித்த ஏ.ஆர்.ரகுமான்
அதில் “அன்பு நண்பர்களே, நமது கலாச்சாரத்தை மதிக்கவும், அதனுடன் ஈடுபடவும், கொண்டாடவும் எனது எப்போதுமான வழி இசையாகவே இருந்தது. இந்தியாதான் எனது உத்வேகம், எனது குரு, எனது வீடு. நமது நோக்கம் சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் உணர்கிறேன். இந்த கலாச்சாரத்தை மதிப்பதும், சேவை செய்வதும் எப்போதும் இசை மூலம் செய்வதே எனது நோக்கமாக இருந்தது. யாரையும் புண்படுத்த நான் ஒருபோதும் விரும்பியதில்லை. எனது நேர்மையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
34
இசைக்காகவே என் வாழ்க்கை
இந்தியனாக இருப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். மாறுபட்ட கலாச்சாரங்களின் குரலைக் கொண்டாடக்கூடிய கருத்துச் சுதந்திரம் உள்ள இடம் கிடைத்ததும் அதனால்தான். இசை வாழ்க்கையின் ஒவ்வொரு பயணமும் எனது இலக்கை நிறைவேற்றுகிறது. இந்த நாட்டிற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். கடந்த காலத்தை மதிக்கும், நிகழ்காலத்தைக் கொண்டாடும், எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கான அர்ப்பணிப்பாகவே எனது வாழ்க்கை எப்போதும் இருக்கும். ஜெய் ஹிந்த்”. என ரகுமான் பேசி இருக்கிறார்.
பிபிசி ஏசியன் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் ரகுமானின் கருத்துக்கள்தான் முன்னதாக செய்திகளில் முக்கியத்துவம் பெற்றன. அதில் பேசுகையில், அவர் பல்வேறு வதந்திகள் என் காதுகளுக்கு எட்டுகின்றன. ஆனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனக்குக் குடும்பத்துடன் செலவிட அதிக நேரம் கிடைக்கிறது. நான் இப்போது வேலை தேடி அலையவில்லை, எனக்கு வேலை தேடிப் போக வேண்டியதில்லை. வேலை என்னைத் தேடி வர வேண்டும். நான் தகுதியானதை நான் பெறுவேன், என்று ரகுமான் கூறியிருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.