கமர்ஷியல் கிங் + பிரம்மாண்ட இயக்குனர் கூட்டணி... தோல்விக்கு பின் தரமான கம்பேக் கொடுக்க ரெடியான ஷங்கர் - முருகதாஸ்?

Published : Aug 29, 2026, 06:33 PM IST

AR Murugadoss and Shankar : பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்களான ஷங்கரும், ஏ.ஆர்.முருகதாஸும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

PREV
14
ஏ.ஆர்.முருகதாஸ் - ஷங்கர் கூட்டணி

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்குவதிலும், விறுவிறுப்பான கமர்ஷியல் கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தனித்துவமான பாணியை உருவாக்கியவர்கள் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர். இருவரும் தங்களது திரைப்படங்கள் மூலம் பல்வேறு காலகட்டங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து புதிய படத்திற்காக பணியாற்ற உள்ளதாக வெளியாகி வரும் தகவல் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் ‘கனிமா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

24
வெற்றிப் பாதைக்கு திரும்பும் முயற்சியில் முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர். வலுவான ஹீரோ கதாபாத்திரம், சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதை, அதிரடியான திரைக்கதை என அவரது படங்களில் ரசிகர்களை ஈர்க்கும் பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். சமீபகாலமாக அவரது சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், அடுத்ததாக அவர் எந்த மாதிரியான கதையை கையில் எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் இயக்கிய மதராஸி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், படம் வெளியான பிறகு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு முன்னதாக சல்மான் கானை வைத்து அவர் இயக்கிய சிகந்தர் திரைப்படமும் பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. இதனால், அடுத்த படத்தில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளார்.

34
ஷங்கருக்கும் எதிர்பார்ப்பு அதிகம்

மறுபுறம், இந்திய சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்கிய இயக்குனர்களில் ஷங்கருக்கு முக்கிய இடம் உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட், பிரமிக்க வைக்கும் காட்சிகள், சமூக கருத்துகள் மற்றும் வலுவான கதாநாயகர்கள் ஆகியவை அவரது திரைப்படங்களின் முக்கிய அடையாளங்களாக இருந்து வருகின்றன. அவரது சமீபத்திய படைப்பான கேம் சேஞ்சர், ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் உருவானது. ஷங்கர் இயக்கம் என்பதாலும், பிரம்மாண்டமான தயாரிப்பு என்பதாலும் இப்படத்தின் மீது ஆரம்பத்திலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் வெளியான பின்னர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று பிளாப் ஆனது.

இதனிடையே, இந்தியன் 3 தொடர்பான எதிர்பார்ப்பும் நீடித்து வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2-வின் தொடர்ச்சியாக இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தியன் 2 பிளாப் ஆனதால் இப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்.

44
முருகதாஸ் கதை... ஷங்கர் இயக்கம்?

இந்த சூழலில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர் இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் பரவி வரும் தகவலின்படி, முருகதாஸ் கதையை, ஷங்கர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இருவரின் வழக்கமான கூட்டணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முயற்சியாக இப்படம் இருக்கும்.

முருகதாஸின் விறுவிறுப்பான கதை சொல்லும் திறனும், ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களும் ஒருபுறம் இருக்க, ஷங்கரின் பிரம்மாண்டமான மேக்கிங் மறுபுறம் இணைந்தால் படம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிக்கப்போகும் நடிகர் யார், எந்த நிறுவனம் தயாரிக்கிறது, படத்தின் பட்ஜெட் எவ்வளவு, படப்பிடிப்பு எப்போது தொடங்கும் உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. மேலும், முருகதாஸ்–ஷங்கர் கூட்டணி குறித்த தகவலுக்கும் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி இயக்குனர்களும் ஒரே படத்திற்காக இணைகிறார்கள் என்ற தகவலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த கூட்டணி உறுதியாகி, முருகதாஸ் கதையில் ஷங்கர் இயக்கும் திரைப்படம் உருவானால், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பே கோலிவுட்டில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories