முரளி விஜயைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பெயரும் பிக்பாஸ் 10 போட்டியாளர் பட்டியலில் அடிபடுகிறது. ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஆல்யா மானசா, சின்னத்திரையில் மிகவும் பரிச்சயமான முகமாக உள்ளார். தற்போது அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரிஜாதம்’ தொடரில் நடித்து வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆல்யா மானசா உண்மையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால், அவரது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அவரது பங்கேற்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
முரளி விஜய், ஆல்யா மானசா உள்ளிட்ட பலரது பெயர்கள் தற்போது இணையத்தில் உலா வந்தாலும், அதிகாரப்பூர்வ போட்டியாளர் பட்டியல் வெளியாகும் வரை இவை அனைத்தையும் உறுதியான தகவல்களாக எடுத்துக்கொள்ள முடியாது. செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்களில் எவை உண்மை, எவை வதந்தி என்பது தெரியவரும்.