கவர்ச்சிக்கு மட்டும் தான் லாயக்குனு சொன்னவர்கள் மூஞ்சில் கரியை பூசிய இந்த நடிகை யார் தெரியுமா?
கவர்ச்சிக்கு மட்டுமே செட் ஆவார் என விமர்சிக்கப்பட்ட நடிகை ஒருவர், தன்னுடைய நடிப்பால் முன்னேறி தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் ஆகி இருக்கிறார்.
கவர்ச்சிக்கு மட்டுமே செட் ஆவார் என விமர்சிக்கப்பட்ட நடிகை ஒருவர், தன்னுடைய நடிப்பால் முன்னேறி தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் ஆகி இருக்கிறார்.
Lady Superstar Actress Who Face Struggles in cinema : சினிமா துறையில் சில நேரங்களில் அதிசயங்கள் நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சிலர் ஒரு சில திரைப்படங்களின் மூலம் தங்கள் வாழ்நாள் புகழைப் பெற்று ஸ்டார் பட்டத்தையும் வென்றிருக்கிறார்கள். சாதாரண நடிகர், நடிகைகள் ஸ்டார்களாக மாறுகிறார்கள். அதேபோல், தென்னிந்திய சினிமா துறையில், இவர் கவர்ச்சிக்கு மட்டுமே பொருத்தமானவர் என்று சொன்னவர்களுக்கு, இந்த நடிகை சில நாட்களிலேயே ஸ்டார் அந்தஸ்தைப் பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
கவர்ச்சியால் கவர்ந்த அனுஷ்கா
அந்த நடிகை வேறுயாருமில்லை.. அனுஷ்கா ஷெட்டி தான். இவர் தெலுங்கில் வெளியான சூப்பர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சூப்பர் படத்திற்குப் பிறகு அனுஷ்காவிற்கு டோலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வந்தன. சூப்பர் மூவியில் அனுஷ்காவின் கவர்ச்சிக்கு அனைவரும் மயங்கினர். இதனால் கமர்ஷியல் படங்களில் அவரை நடிக்க வைக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர். விக்ரமார்குடு, சிந்தகாயல ரவி போன்ற வெற்றிப் படங்கள் வந்தன. ஆனால், நடிப்பு விஷயத்தில் சரியான அடையாளம் அனுஷ்காவிற்கு கிடைக்கவில்லை.
அருந்ததி வாய்ப்பு எப்படி வந்தது?
அந்த நேரத்தில் அனுஷ்காவிற்கு ஒரு கிரேஸி ஆஃபர் வந்தது. அதுதான் அருந்ததி படம். இந்த படத்தில் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று அனுஷ்காவிற்கு அப்போது தெரியவில்லை. அந்த நேரத்தில் அவர் நட்சத்திர அந்தஸ்தை கூட பெறவில்லை. மேலும் தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டியின் பொருளாதார நிலை அந்த நேரத்தில் சரியில்லை. ஹீரோயின் ஓரியண்டட் படம் என்பதால் என்னை விட பெரிய ஸ்டாரை எடுத்திருந்தால் கொஞ்சம் சேஃப் ஜோனில் இருந்திருப்பார்கள். அருந்ததி படத்தில் என்னை தேர்ந்தெடுத்தது ஷ்யாம் பிரசாத் ரெட்டி தான் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... Anushka Shetty : மாஸ் ஹீரோவுடன் நடிச்ச எல்லா படமும் தோல்வி, ஒரு ஹிட் கூட இல்ல: அப்செட்டில் அனுஷ்கா!
அனுஷ்கா கவர்ச்சிக்கு மட்டும் தான் லாயக்கு
இன்னும் சிலர் இந்த பொண்ணு வேண்டாம் என்று இயக்குனர்களுக்கு ஆலோசனை கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். உனக்கு என்ன பைத்தியமா இவ்வளவு பெரிய படம் எடுக்கிற. அதிலும் அந்த பொண்ணை ஏன் வெச்சிருக்க என்று கேட்டார்கள். அவள் கவர்ச்சிக்கு மட்டும்தான் லாயக்கு, நடிப்புக்கு இல்லை என்று ஆலோசனை கொடுத்தார்களாம்.
ஆனால் ஷ்யாம் பிரசாத் ரெட்டி என்னை நம்பினார். என் மேல் இந்த படம் ஒர்க் அவுட் ஆகும் என்று அவர் நினைத்தார். அருந்ததி படம் வரைக்கும் ஆக்டிங் பற்றி, கிராபிக்ஸ் பற்றி அதிகம் தெரியாது. விக்ரமார்குடு படத்தில் நடிக்கும்போது ராஜமௌலி செய்து காட்டினால், அதை அப்படியே காப்பி அடிப்பேன். சொந்தமாக ஆக்ட் செய்வது தெரியாது என்று அனுஷ்கா கூறியுள்ளார்.
அனுஷ்கா சொத்து மதிப்பு
அருந்ததி படத்தில் இருந்து மெதுவாக எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன் என்று அனுஷ்கா கூறியுள்ளார். அருந்ததி அற்புதமான வெற்றி பெற்றது. ஸ்டார் ஹீரோக்களுக்கு போட்டியாக அனுஷ்கா வளர்ந்தார். அதன் பிறகு ராஜமௌலி பாகுபலி படத்தில் கூட அனுஷ்காவிற்கு வாய்ப்பு கொடுத்தார். பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற படங்களில் அனுஷ்கா தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்தார். நயன்தாராவுக்குப் பிறகு தென்னிந்தியாவில் அதிக நிகர மதிப்புள்ள நடிகை அனுஷ்கா, அவரது சொத்து மதிப்பு சுமார் 150 கோடி வரை உள்ளது.
இதையும் படியுங்கள்... அனுஷ்கா - விக்ரம் பிரபு நடித்த ‘காதி’ படம் தள்ளிப்போகிறதா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ