டிசம்பர் மாதம் 5-ம் தேதி முதல் லாக்டவுன் வர உள்ளதாக இன்று காலை அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதனைப்பற்றிய முழு அப்டேட்டை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
லாக்டவுன் என்ற வார்த்தையை கேட்டதுமே அனைவருக்கும் ஒருவித பதற்றம் ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் கொரோனா தான். கொரானா பரவலின் போது போடப்பட்ட லாக்டவுனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நாம் பார்க்க உள்ளது அந்த லாக்டவுன் பற்றி அல்ல. இது ஒரு திரைப்படம். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தை ஏ.ஆர். ஜீவா இயக்கி உள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
24
லாக்டவுன் ரிலீஸ் தேதி
அதன்படி அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கும் 'லாக்டவுன்' திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியாரே திரைப்படமும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமீபத்திய தகவல்படி அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. அதனால் அந்த தேதியை லாக்டவுன் படக்குழு பிடித்துள்ளது.
34
கோலிவுட்டின் லக்கி சார்ம் அனுபமா
அனுபமா பரமேஸ்வரனுக்கு இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் லக்கியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு அவர் நடித்த டிராகன் படம் முதன்முதலில் ரிலீஸ் ஆனது. அதில் பிரதீப் ரங்கநாதனின் காதலியாக நடித்திருந்தார் அனுபமா. அவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதற்கு அடுத்தபடியாக விக்ரம் மகன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்த பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.70 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. தமிழில் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அனுபமா, அடுத்ததாக லாக்டவுன் படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.