விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை-யில் மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீ தேவா, போட்டுள்ள இன்ஸ்டா பதிவால் அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக முத்து கேரக்டரில் வெற்றி வசந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா நடித்து வருகிறார். முத்துவுக்கு அடுத்தபடியாக இந்த சீரியலில் மனோஜ், ரோகிணி, அண்ணாமலை, விஜயா, ஸ்ருதி, ரவி, லட்சுமி என நிறைய துணை கதாபாத்திரங்களும் உள்ளன. இந்த நிலையில், இந்த சீரியலில் மனோஜ் ஆக நடித்து வரும் ஸ்ரீ தேவா, சீரியலை விட்டு விலகுவதாக தகவல் பரவி வருகிறது. அதற்கு காரணம் அவரின் இன்ஸ்டா பதிவு தான்.
24
சிறகடிக்க ஆசை மனோஜின் இன்ஸ்டா பதிவு
அந்த பதிவில், இரண்டு வருடங்கள், 450 எபிசோடுகள்... நான் உன் முகத்தில இருந்த கண்ணாடி உன் முகத்தின் முதல் பாதுகாவலன் இன்று உன்னை விட்டு விடைபெறுகிறேன். கேமரா ஆன் ஆன தருணத்திலிருந்து நீ சொன்ன ஒவ்வொரு டயலாக்கும் நீ சொதப்பிய தருணங்களும் நீ சோதிக்கப்பட்டதும், நீ சிந்திய கண்ணீரும் எல்லாத்தையும் என் லென்ஸ்லே ரெக்கார்ட் ஆயிருக்கு. நீ விழுந்த நாளும் பார்த்தேன். அதுக்கு மேல், உன் ஆர்வத்தை நான் பாராட்டுறேன். நீ மேல எழுந்த நாளும் பார்த்தேன்.
34
ஓய்வெடுக்கிற நேரம் வந்துருச்சாம்
உன்ன நான் நம்புறேன். உன் பயணத்தின் தொடக்கமே இது பிரிவு எல்லாருக்கும் பொதுவானது. ஆனா என் கடைசி வார்த்தை, கண்ணாடி உடையலாம்... ஆனா ஹீரோவின் பார்வை உடையக்கூடாது. கண்ணாடி மாறலாம்…ஆனா நீ நடிக்கும் போது உன் கண்களின் தீ மாறக்கூடாது. ஆல் தி பெஸ்ட் நண்பா. இப்போ நான் ஓய்வெடுக்கிற நேரம் வந்துருச்சு. ஒரு புதிய ஹீரோவுக்கு வழி கொடுக்குற பழையஹீரோ மாதிரி. போ மனோஜ்… புதிய கண்ணாடியோட வர்ற உன் அடுத்த ஃபிரேம், எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யட்டும். இப்படிக்கு உன் மீது அக்கறை கொண்ட உன் பழைய கண்ணாடி” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவைப் பார்த்து கன்பியூஸ் ஆன ரசிகர்கள், அவர் தான் இந்த சீரியலை விட்டு விலகுகிறார் என நினைத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். ஆனால் அவர் போட்ட பதிவு கண்ணாடிக்காக. அவர் தன்னுடைய கண்ணாடியை மாற்றி இருப்பதற்காக தான் இவ்வளவு பில்டப்போடு ஒரு பதிவை போட்டிருக்கிறார். இதை கண்டுபிடித்த சிலர், கண்ணாடிக்கு இவ்வளவு பில்டப் கொடுப்பது ரொம்ப ஓவர் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த சீரியலில் ரோகிணியின் கணவராக மனோஜ் நடித்து வருகிறார். அவரின் நகைச்சுவை கலந்த நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.