தடைகளை கடந்து புதிய உச்சத்தை தொட்ட சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலுக்கு குவியும் பாராட்டு

Published : Nov 19, 2025, 12:04 PM IST

சன் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் புதிய உச்சத்தை தொட்டிருப்பதால், அந்த சீரியல் குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

PREV
12
Anandha Ragam Serial Reaches New Milestone

சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் ஆனந்த ராகம். இந்த சீரியலில் அழகப்பன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இதில் ப்ரீத்தா சஞ்சீவ், இந்து, ரஞ்சன் குமார், செந்தில் குமார், ஸ்வேதா, அஞ்சலி, வைஷாலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஆனந்த ராகம் சீரியலில் ஆரம்பத்தில் சிங்கிள் ரோலில் நடித்து வந்த நாயகி அனுஷா அண்மையில் இரட்டை வேடத்தில் நடிக்கத் தொடங்கினார்.

ஆனந்த ராகம் சீரியல்

ஆனந்த ராகம் சீரியலில் ஆரம்பத்தில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. பொதுவாகவே மாலை நேர சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம். அதேபோல் ஆனந்த ராகம் சீரியலுக்கும் மாலை நேரத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு திடீரென இந்த சீரியல் நேரத்தை மாற்றினர். மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் சீரியல் மதியம் 3 மணிக்கு மாற்றப்பட்டது.

22
1000 எபிசோடு

நேர மாற்றத்தினால் அப்செட் ஆன ரசிகர்கள், அந்த சீரியலை மாலை நேரத்திற்கு மாற்ற வலியுறுத்தினர். ஆனால் சீரியல் குழு அதற்கு செவிசாய்க்கவில்லை. மதிய நேரத்தில் ஒளிபரப்பாவதால், ஆனந்த ராகம் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. டிஆர்பி-யில் சோபிக்காவிட்டால் அந்த சீரியலை நிறுத்துவிடுவார்கள். ஆனந்த ராகம் சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தொடும் முன் அதை நிறுத்தி விடுவார்கள் என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

சாதித்த ஆனந்த ராகம் சீரியல்

ஆனால் இந்த தடைகளை எல்லாம் கடந்து தற்போது ஆனந்த ராகம் சீரியல் ஆயிரமாவது எபிசோடை எட்டி உள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி அந்த சீரியல் குழுவினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் கயல் சீரியலுக்கு அடுத்தபடியாக 1000 எபிசோடுகளை எட்டிய சீரியல் என்கிற பெருமையை ஆனந்த ராகம் சீரியல் பெற்றுள்ளது. இந்த சீரியல் தொடர்ந்து வெற்றிநடைபோட வேண்டும் என ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories