சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 பெஸ்ட் சீரியல்கள் என்னென்ன?

Published : Nov 19, 2025, 12:49 PM IST

தமிழ்நாட்டில் பேமஸ் ஆன சேனல்களாக இருக்கும் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் தொடர்களில் டாப் 5 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
Top 5 Most Watched Serials in Sun TV, Zee Tamil and Vijay TV

தமிழ்நாட்டில் சினிமாவுக்கு நிகராக சீரியல்களும் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. முன்பெல்லாம் சீரியல்கள் என்றால் ஒரே டெம்பிளேட்டில் இருக்கும் என்கிற விமர்சனம் இருந்தது. அதன் காரணாமாகவே அதை பலரும் வெறுத்தனர். ஆனால் தற்போது அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சின்னத்திரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில், கடந்த வாரம் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவற்றில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 சீரியல்களையும் அதன் டிஆர்பி ரேட்டிங் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
சன் டிவியின் டாப் 5 சீரியல்கள்

சன் டிவியில் மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட சீரியல் என்றால் அது மூன்று முடிச்சு தான். இந்த சீரியல் 10.49 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேங்கிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. அதற்கு 9.78 ரேட்டிங் கிடைத்துள்ளது. மூன்றாம் இடத்தை பிடித்துள்ள கயல் சீரியலுக்கு 9.41 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் மருமகள் சீரியல் உள்ளது. அதற்கு 8.63 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. ஐந்தாவது இடத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. அதற்கு 8.55 புள்ளிகள் கிடைத்துள்ளன.

34
டாப் 5 விஜய் டிவி சீரியல்கள்

விஜய் டிவியில் முதலிடம் பிடித்திருந்த அய்யனார் துணை சீரியலை கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் பின்னுக்கு தள்ளியது. அந்த சீரியல், 8.41 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அய்யனார் துணை சீரியல் 8.29 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. 7.37 புள்ளிகள் உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது. சின்ன மருமகள் சீரியல் 6.72 புள்ளிகள் உடன் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. ஐந்தாவது இடத்தில் சிந்து பைரவி சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு 5.44 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

44
ஜீ தமிழ் டாப் 5 சீரியல்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியலான கார்த்திகை தீபம் 2 தொடர் 5.58 டிஆர்பி உடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அண்ணா மற்றும் அயலி ஆகிய சீரியல்கள் 5.05 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. ஆலியா மானசா நடித்த பாரிஜாதம் சீரியல் 4.54 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 4.21 புள்ளிகளை பெற்றுள்ள சந்தியா ராகம் சீரியல் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. ஐந்தாம் இடத்தில் உள்ள சின்னஞ்சிறு கிளியே சீரியலுக்கு 4.08 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories