'குடிச்சுட்டுதான் மீட்டிங்குக்கு வர்றார்' - விஜய்க்கு எதிராக கிளம்பிய சர்ச்சை; பதிலடி கொடுத்த பிரபல நடிகர்!

Published : Mar 24, 2026, 08:27 AM IST

தளபதி விஜய் குடித்துவிட்டுதான் பொதுக்கூட்டங்களுக்கு வருகிறார் என சமீபத்தில் ஒரு சர்ச்சை கிளம்பியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு நடிகர் அனு மோகன் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
14
Thalapathy Vijay Controversy

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் வருகின்றன. ஒருபக்கம் மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து, த்ரிஷாவுடன் காதல் என கிசுகிசுக்கள்; மறுபக்கம் அரசியல் ரீதியான விமர்சனங்கள். இந்த நிலையில், தவெக-வில் இருந்து நீக்கப்பட்ட ரஞ்சனா நாச்சியார், 'விஜய் குடித்துவிட்டுதான் பொதுக்கூட்டங்களுக்கு வருகிறார்' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

24
ரஞ்சனா நாச்சியார் குற்றச்சாட்டு

சமீபத்தில் விமானப் பயணத்தின்போது விஜய்யின் கைப் பையில் கத்தரிக்கோல் இருந்ததாகவும், அதற்காக விமான நிலைய ஊழியர்கள் அவரை சில மணிநேரம் தடுத்து நிறுத்தியதாகவும் ஒரு செய்தி பரவியது. அவருடன் பயணம் செய்த ஆதவ் அர்ஜுனாவின் பையில் மது பாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆதவ் அர்ஜுனா இதை மறுத்து விளக்கம் அளித்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், தவெக-வில் இருந்து நீக்கப்பட்ட ரஞ்சனா நாச்சியார், 'விஜய்யால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாது, குடித்துவிட்டுதான் பொதுக்கூட்டங்களில் பேசுவார்' என்று கூறியதாக செய்திகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் அனல் பறக்க விவாதம் நடந்தது.

34
அனு மோகனின் பேட்டி வைரல்

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகர் அனு மோகனின் பழைய பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அனு மோகன், 'ஒருமுறை ஷூட்டிங் பிரேக்கில் நான் தனியாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கம் வந்த விஜய் என்னைப் பார்த்ததும் உடனே திரும்பிச் சென்றார். ஏன் என்று கேட்டதற்கு, 'அண்ணா, நீங்க சிகரெட் பிடிக்கிறீங்க... அந்த வாசனை எனக்குப் பிடிக்காது' என்று மரியாதையாகச் சொன்னார். பின்பு, 'இது உங்க உடம்புக்கும் நல்லது இல்ல... முடிஞ்சா விட்டுடுங்க' என்று அன்பாக அறிவுரை கூறினார்' என அனு மோகன் அந்த நிகழ்வை நினைவுகூர்ந்துள்ளார்.

44
பாராட்டும் நெட்டிசன்கள்

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 'சிகரெட், மது போன்ற பழக்கங்களைத் தவிர்க்கச் சொல்லும் ஒருவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பது நியாயமா?' என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசியல் பிரவேசத்தால் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வரும் விஜய், ஒருபுறம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், அவருடன் பணியாற்றியவர்கள் பகிரும் இதுபோன்ற அனுபவங்கள் அவரது நல்ல பெயரை மேலும் வலுப்படுத்துகின்றன. இந்த விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories