Janani Ashok Kumar 16 Years Same Playlist : நடிகை ஜனனி அசோக் குமார் தன்னைப் பற்றி வெளிப்படையாக பேசுகிறேன் என்ற பெயரில் தனது பள்ளி பருவம் முதல் இப்போது வரை என்னெல்லாம் நடந்தது என்பதை சொல்லி வசமாக சிக்கிக் கொண்டார்.
வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத பலரும் சின்னத்திரையில் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். அதிலேயும், சீரியலுக்கு வருவேனா என்று கூட தெரியாமல் பலரும் வந்து இப்போது சீரியலில் முன்னணி ரோலில் நடித்து பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். அப்படி ஒரு சீரியல் நடிகை தான் இப்போது நம்ம கண்ணில் பட்டுள்ளார். ஆம், அவர் இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு முறை தான் வாக்களித்திருக்கிறேன். அதுவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தான் நான் ஓட்டு போட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
27
Janani Ashok Kumar
மேலும், தனது பள்ளிப்பருவம் முதல் இப்போது வரை என்னெல்லாம் நடந்தது என்பது குறித்தும் பேசியிருக்கிறார். அப்படி என்ன பேசியிருக்கிறார் என்று பார்க்கலாம். சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான ஜனனி அசோக் குமார், தனது எதார்த்தமான நடிப்பால் பல இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர். மார்ச் 2026-ன் தற்போதைய நிலவரப்படி அவர் குறித்த முக்கிய தகவல்கள் இதோ:
37
1. சீரியல் மற்றும் மெகா ஹிட் ரோல்கள்
ஜனனி அசோக் குமார் தற்போது ஜீ தமிழ் (Zee Tamil) தொலைக்காட்சியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான 'இதயம்' (Idhayam) தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இதற்கு முன் அவர் நடித்த சில மறக்க முடியாத கதாபாத்திரங்கள்:
செம்பருத்தி: இதில் 'ஐஸ்வர்யா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.
மாப்பிள்ளை: மாப்பிள்ளை சீரியலில் ஜனனி என்ற ரோலில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
நாம் இருவர் நமக்கு இருவர்: சரவணன்-மீனாட்சிக்குப் பிறகு இவருக்குப் பெரிய அடையாளத்தைத் தந்த தொடர்.
வேற மாறி ஆபீஸ் (Vera Maari Office): ஆஹா (Aaha) ஓடிடியில் வெளியான இந்த வெப் சீரிஸிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தார்.
47
2 புதிய பிஸினஸ் அவதாரம்
சீரியல்களில் அமைதியான பெண்ணாகப் பார்த்த ஜனனியை, நிஜ வாழ்க்கையில் ஒரு தைரியமான மற்றும் புத்திசாலியான போட்டியாளராகப் பார்த்தது ரசிகர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. நடிப்பையும் தாண்டி ஜனனி ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் (Entrepreneur) மாறியுள்ளார். பிப்ரவரி 2026-ல் அவர் சென்னையில் தனது நீண்ட நாள் கனவான ஒரு புதிய பேக்கரியைத் (Bakery/Sweets Shop) தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழாவிற்கு அவரது நெருங்கிய தோழி ஷபானா உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நான் நடிக்க வேண்டும் என்பதற்காக வரவில்லை. எனக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு கடவுள் நிறைய செருப்படி கொடுத்திருக்காரு. கரெக்டான டைம்ல கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டார். எனக்கு ஜெயலலிதா அம்மாவை ரொம்ப பிடிக்கும். இதுவரையில் என்னுடைய லைஃப்ல நான் ஒரு வாட்டி தான் ஓட்டு போட்டுருக்கேன் என்றார்.
67
Janani Ashok Kumar new business 2026
மேலும், எனக்கு இது வரையில் வாழ்க்கையை மாற்றிய ஒரு மொமண்ட் நடக்கவே இல்லை. அந்த மொமெண்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்கூல் படிக்கும் போதிலிருந்து அந்த கெட்டபழக்கம் இருக்கு. கடைசி நேரத்துல தான் எல்லாத்தையும் செய்து முடிப்பேன். புதுசா யாரிடமாவது பேசுவதற்கு ரொம்ப தயக்கமாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருந்த ஜனனி அசோக் குமார் தனது பிளேலிஸ்ட் பற்றி பேசினார். அதில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை மொத்தம் 13 ஆண்டுகள் தான். ஆனால், அவர் 16 ஆண்டுகள் என்று கூறி இத்தனை ஆண்டுகளில் என்னுடைய பிளேலிஸ்டில் ராஜா சார் மற்றும் ஏஆர் ரகுமான் சாங்க்ஸ்தான் ரொம்பவே இருக்கும். இப்போது வேண்டுமென்றால் ஒரு சில சாங்ஸ் சேர்த்திருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
77
Sembaruthi fame Janani Ashok Kumar latest news
கடைசியாக தனது அண்ணன் இப்போது இல்லை என்று கூறி அனைவரையும் கண்கலங்க செய்தார். தான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவன் இறந்துவிட்டான். இப்போது என்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எமோஷனலாக பேசினார்.