விஐயகாந்த் நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் ஒன்று தான் வைதேகி காத்திருந்தார். இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமனி, செந்தில், பிரமிலா ஜோஷாய், உசிலமணி, ராதா ரவி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இதில், விஜயகாந்த் முதலில் நடிகை பிரமிளா ஜோஷாயை காதலிக்க, திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் விளையாட்டு வினையாக தற்கொலை செய்து கொள்வார்.
25
Vijayakanth Movie
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ரேவதி, திருமணத்திற்கு பின் கணவருடன் படகு செல்லும் போது அந்த படகு விபத்தில் சிக்கியதால் கணவனை இழந்த பெண்ணாக வாழ்த்து வருவார். அவரைக் பார்க்க பார்க்க சோகத்திற்கு உள்ளாகும் அவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். வெள்ளைச்சாமியான விஜயகாந்த் பிழைப்புக்காக கோயிலில் வேலை பார்க்கிறார். அந்த கோயிலில் தன்னுடைய காதலியின் பெயரான வைதேகி வைதேகி என்று எழுதி வைக்கிறார்.
இதையறிந்த ஊரார் புறம் பேச ஆரம்பிக்கிறார்கள். இது குறித்து ரேவதி கேட்டு தெரிந்து கொள்கிறாள். இதையடுத்து அந்த ஊரில் வேலைக்கு வரும் இளைஞனும், அந்த ஊரைச் சேர்ந்த ரௌடியின் சகோதரியும் காதலிக்கிறார்கள். ரௌடி அண்ணனால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதன் பிறகு விஜயகாந்த் மற்றும் ரேவதி இருவரும் இணைந்து அவர்களை சேர்த்து வைக்க போராடுகிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? வெள்ளைச்சாமியான விஜயகாந்திற்கு என்ன நடந்தது என்பது தான் படத்தோட கதை.
45
Revathi
இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனையும் படைத்தது. இந்த படத்தை இயக்குனரும் - நடிகருமான ஆர் சுந்தர் ராஜன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் இசை தான். இந்நிலையில் இந்த ஹிட் படத்தை மிஸ் பண்ணிவிட்டதாக வேதனையோடு கூறி உள்ளார், அனிதா புஷ்பவனம் குப்புசாமி.
இந்தப் படத்தில் ரேவதி ரோலில் முதலில் நடிக்க இருந்தது அனிதா தானம். இந்த படத்திற்கு ஹீரோயினை தேர்வு செய்யும் பொறுப்பை சுந்தர் ராஜன், அவரின் பரதநாட்டிய மாஸ்டரிடம் தான் கொடுத்தாராம். ஆனால், அனிதாவின் வீட்டில், ஏற்கனவே பாட்டு கிளாஸூக்கு கூட செல்வதற்கு பெரும் போராட்டமாக இருந்ததாம். அந்த சூழலில் எப்படி சினிமாவில் நடிக்க ஓகே சொல்லுவாங்க என்பதை எண்ணி இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.