அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டு எந்த அளவுக்கு பேமஸ் ஆனாரோ, அதன்மூலம் சர்ச்சையிலும் சிக்கியவர் தான் டிடிஎப் வாசன். 2கே கிட்ஸ் கொடுத்த வரவேற்பால் பேமஸ் ஆன டிடிஎப் வாசனுக்கு யூடியூப்பில் கிட்டத்தட்ட 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள முதல் திரைப்படம் மஞ்சள் வீரன். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
manjal veeran
மஞ்சள் வீரன் படத்தை செல் அம் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். டிடிஎப் வாசன் படத்தை இயக்க உள்ளார் என தெரிந்ததும், அவரது ரசிகர்கள் யூடியூப்பில் தேடிப்பிடித்து பார்த்த படம் திருவிக பூங்கா. கிரிஞ் காமெடி நிறைந்த அப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், தயவு செய்து இந்த படத்தில் இருந்து விலகி விடுங்கள் என டிடிஎப் வாசனுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... டூர் போன இடத்தில் டூபீஸ் போட்டோஷூட்... ‘கண்ணழகி’ பிரியா பிரகாஷ் வாரியரின் செம்ம ஹாட் கிளிக்ஸ் இதோ
இந்த ட்ரோல்கள் குறித்து சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்த டிடிஎப் வாசன், மஞ்சள் வீரன் கதை மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், இப்படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் எனவும் கூறினார். அதோடு அமலா ஷாஜி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த டிடிஎப், அதனை மறுத்துள்ளதோடு, தன்னைவிட அமலா ஷாஜி கடுமையாக ட்ரோல் செய்யப்படுவதைக் கண்டு வருத்தமடைந்ததாக கூறினார்.
இப்படி மஞ்சள் வீரன் படம் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒரு லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், மஞ்சள் வீரன் படத்தின் ஓப்பனிங் சாங்கை தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தான் பாட உள்ளாராம். இப்பாடலை அறிமுக இசையமைப்பாளர் அனிவி இசையமைக்க உள்ளாராம். டிடிஎப் வாசனின் படத்துக்காக அனிருத் பாடல் பாட உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஒன்று அல்ல.. இன்று இரண்டு.. மாலை வெளியாகும் கங்குவா படத்தின் அடுத்த அப்டேட் - படக்குழு அறிவிப்பு!