தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தற்போது பான் இந்தியா இசையமைப்பாளராகவும் உருவெடுத்து வருகிறார். அனிருத் கைவசம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஜூனியர் என்.டி.ஆர் படம் மற்றும் இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தமிழிலும் இவர் கைவசம் முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
24
அந்த வகையில் தமிழில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் தலைவர் 171, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ, மகிழ் திருமேனி - அஜித் கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி. ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான இந்தியன் 2 என அனிருத்தின் காட்டில் பட மழை பொழிந்து வருகிறது. அந்த அளவுக்கு மிகவும் டிமாண்ட் ஆன இசையமைப்பாளராக அனிருத் இருந்து வருகிறார். தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை கொடுத்து வரும் அனிருத் கடந்தாண்டு தான் தன் சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடா முயற்சி படத்திற்காக அனிருத் வாங்கி உள்ள சம்பளம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி விடாமுயற்சிக்காக அனிருத் ரூ.5 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திய பின்னர் அனிருத் ஏன் அஜித் படத்திற்காக மட்டும் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என்கிற கேள்வியை தான் பலரும் எழுப்பி வருகின்றனர்.
44
அதன் காரணம் என்னவென்றால், அனிருத் விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளராக கமிட் ஆனது கடந்தாண்டு மார்ச் மாதம். அதுவரை அவர் ரூ.5 கோடி தான் சம்பளமாக வாங்கி வந்துள்ளார். அதன்பின்னர் தான் அவரது இசையில் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என தொடர்ந்து பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி அதன் பாடல்களும் வேறலெவலில் ஹிட் அடித்தன. அந்த படங்களின் தொடர் வெற்றியின் காரணமாக தான் அனிருத் தன் சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.