இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!

First Published | Oct 25, 2020, 5:31 PM IST

குட்டி பாப்பாவாக இருந்த அனிகா குமரி பெண்ணாக மாறிய பிறகு வெளியிடும் போட்டோஸ் சற்றே சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Anikha surendran Latest photos Going viral
2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார்.
அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன்.அந்த படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.

சமீபத்தில் வெளியான குயின் வெப் சிரீஸில் கூட அனிகாவின் நடிப்பு ஆகா... ஓஹோ... என்று புகழப்பட்டது. 15 வயதான இந்த கேரளத்து பைங்கிளி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.
தற்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் விதவிதமான விளம்பர படங்களின் போட்டோ ஷூட்டில் பகிர்ந்து கொள்ளும் அனிகா. அந்த புகைப்படங்கள் அனைத்தும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதனால் அனிகாவிற்கு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கையும் ஒரு மில்லியனைக் கடந்துவிட்டது..
இன்ஸ்டாகிராமில் அனிகாவை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அவருடைய போட்டோ ஷூட் அட்ராசிட்டிகளும் அதிகரித்து வருகிறது.
ஹீரோயின் கனவில் வட்டமிட்டு பறந்து வரும் அனிகா, தற்போது லெஹெங்கா இடை தெரிய போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
கழுத்து நிறைய நகை, கை நிறைய வளையல், கொண்டை, கொண்டையில் பூ என அசத்தலாக உள்ளார் அனிகா. இருந்தாலும் ரசிகர்களுக்கு அந்த இடுப்பு மேட்டர் தான் மிகவும் இடைஞ்சலாக இருப்பதாக கொந்தளித்துள்ளனர்.
இப்படி அனிகா சுரேந்தர் விதவிதமாய் போஸ் கொடுத்து வெளியிடும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் 15 வயசு பொண்ணு மாதிரி உடை அணியுங்கள்... இப்படி எல்லாம் போட்டோஷூட் நடத்தாதீங்க என அறிவுரை கூறிவருகின்றனர்.

Latest Videos

click me!