சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கேஜிஎப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன.உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.