முன்னனி நடிகைகள் பட்டியலில் இருந்த போதே... பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் நடிகை அமலாபால். பின்னர் திடீர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அமலா பால் - ஏ.எல் விஜய் விஜய் விவாகரத்து விஷயம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது வரை இருவருமே தங்களின் விவாகரத்துக்கு காரணம் என்ன என்பதை வெளிப்படையாக கூறியதே இல்லை.
எனினும் பலர் இவர் மிகவும் போல்டாக நடித்துள்ளார் என பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். சமீபத்தில் அமலாபால் நடித்து, தயாரித்திருந்த 'கடவார்' படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
amala paul
ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பின்னர், தன்னுடைய காதலர் குறித்தும், அவருடன் திருமணம் ஆனது குறித்தும் வெளியில் காட்டி கொல்லாத அமலாபால், திருமணம் செய்தவர் மீது பாலியல் வழக்கு கொடுத்து அதிர வைத்துள்ளார். ஏற்கனவே பவ்நிந்தர் சிங் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்தது போன்ற புகைப்படங்கள் வெளியானபோது, அது போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்டது என அமலா பால் கூறினார்.
அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி, கோலிவுட் தரப்பினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரம் இதற்க்கு அமலா பால் தரப்பில் இருந்து எந்த மாதிரியான விளக்கம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.