யூடியூப் மூலம் பிரபலமான பலர் தற்போது வெள்ளித்திரை நடிகராக மாறியுள்ளனர். அந்த வரிசையில் ஸ்மைல் சேட்டை எனும் நிகழ்ச்சியைத் தொடங்கி பின்னர் படி படியாக உயர்ந்து, தற்போது ப்ளாக்ஷீப், உனக்கென்னப்பா உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் பி.எஸ்.வேல்யூ ஓடிடி தளம், என மீடியாவில் பல வெற்றிகரமாக பயணித்து வருபவர் விஜே விக்னேஷ்காந்த்.
இவர் நடிகராக முதன் முதலில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி கிரிக்கெட் வர்ணணையாளராக நடித்திருந்தார்.
இந்த நிலையில், வி.ஜே. விக்னேஷ்காந்துக்கு, கடந்த மே மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்த நிலையில், இன்று இவரது திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
குறிப்பாக பிரபல பேச்சாளரும், நடிகருமான கு. ஞானசம்பந்தன் விஜே விக்னேஷ்காந்த் திருமணத்தில் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.