“எப்போதும் எங்கள் மகாராணி”... பாட்டியுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து ஜி.வி.பிரகாஷ் உருக்கம்...!

Published : Dec 28, 2020, 05:38 PM IST

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் பாட்டி என்பது அனைவரும் அறிந்தது தான்.

PREV
16
“எப்போதும் எங்கள் மகாராணி”... பாட்டியுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து ஜி.வி.பிரகாஷ் உருக்கம்...!

9 வயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அனைத்துமே அவருடைய தாயார் கரீமா பேகம் தான். தன்னுடைய மகனிடம் இருக்கும் இசை திறமையை கண்டறிந்து அதை ஊக்குவித்து இன்று உலகமே இசைப்புயல் எனப்போற்றும் மாபெரும் கலைஞரை உருவாக்கியதில் தாயார் கரீமா பேகத்தின் பங்கு அளப்பறியது. 

26

தாய் கரீமா பேகம் மீதும் ஏ.ஆர்.ரகுமானுக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும்  உண்டு. தன்னை புகழின் உச்சத்தில் அமர வைக்க பாடுபட்ட தனது தாயை பற்றி கூறாமல், தனது வெற்றிக்கதைகளை அவர் கூறியது கிடையாது. 

36

வயது மூப்பு காரணமாக சமீபகாலமாகவே ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட நாட்களாக வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார். 

46

இதையடுத்து திரையுலகினர், அரசியல் தலைவர்கள், இசையுலகினர், ரசிகர்கள் என பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

56

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் பாட்டி என்பது அனைவரும் அறிந்தது தான். தனது பாட்டியின் மறைவு குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது உணர்வுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார். 

66

பாட்டி கரீமா பேகத்துடன் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள ஜி.வி. பிரகாஷ் எப்போதும் எங்கள் மகாராணி என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஜி.வி.பிரகாஷூக்கு ஆறுதலும், இரங்கலும் கூறி வருகின்றனர். 

click me!

Recommended Stories