குட்நியூஸ்... நடிகர் யோகி பாபுவிற்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!

Published : Dec 28, 2020, 05:00 PM ISTUpdated : Dec 28, 2020, 05:08 PM IST

கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்ட யோகிபாபு - மஞ்சு பார்கவி தம்பதிக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

PREV
17
குட்நியூஸ்... நடிகர் யோகி பாபுவிற்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் அனைவருடனும் காமெடியனாக ஒரு ரவுண்ட் வந்து கலக்கிவிட்டார். 

27

கைவைசம் எக்கச்சக்க படங்களை வைத்துக் கொண்டு பிசியாக வலம் வரும் யோகிபாபு கடந்த பிப்ரபவரி மாதம் தனது திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார். 

37

வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்பவரை தனது குலதெய்வம் கோவிலில் வைத்து கரம் பிடித்தார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

47

இதையடுத்து ஏப்ரல் 5ம் தேதி பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதற்கொண்டு திரைப்பிரபலங்கள் பலரையும் அழைக்க முடிவு செய்தார். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக அதுவும் கைவிடப்பட்டது. 

57

கொரோனா தீவிரமடைவதற்குள் குறைந்தபட்சம் 300 பேரை வைத்து சிம்பிளாக வரவேற்பு நிகழ்ச்சியை முடிக்க நினைத்தார். ஆனால் அரசின் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடித்துவிட்டு, யோகிபாபு இப்படி கிராண்ட்டாக விசேஷம் செய்ய பிளான் செய்கிறாரே என விமர்சனங்கள் எழ அதை முற்றிலும் நிறுத்திவிட்டார். 

67

கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்ட யோகிபாபு - மஞ்சு பார்கவி தம்பதிக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து யோகிபாபுவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து கூறி வருகின்றனர். 

77

இந்த நல்ல செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு... யோகி பாபுவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நடிகர் மனோபாலா. 

click me!

Recommended Stories