நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமம்' மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அனுபமா பரமேஸ்வரன்.
இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.
அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை.
இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்', ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தாலும், இவருடைய கவர்ச்சிக்கு தெலுங்கில் கொஞ்சம் மவுசு உள்ளதால் சில படங்கள் இவர் கைவசம் உள்ளன.
தமிழிலும் தள்ளி போகாதே, மற்றும் தலைநகரம் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அந்த வங்கியில் 4 தெலுங்கு படம் 2 தமிழ் படம் என அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.
விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது கியூட் ரியாக்ஷன் மூலம் ரசிகர்களை ஈர்த்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இவை...