பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருப்பவர்.
இவருக்கு அடித்த ஜாக்பார்ட் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில காட்சிகளே 'பேட்ட' படத்தில் மாளவிகா மோகனன் தலைகாட்டினாலும் ரசிகர்கள் மனதில் அச்சாணி போட்டது இவரது அழகும், கதாபாத்திரமும்.
இதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு (Thalapathy Vijay) ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார்.
தளபதி விஜய்க்கு ஜோடி போட்டதில் இருந்தே இவரது மார்க்கெட் அடுத்த லெவலுக்கு எகிறியது. மேலும் சமூக வலைத்தளத்தில் இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களை ரசிப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தற்போது தனுஷின் மாறன் (Dhanush )படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தரமான கதை, பெரிய நடிகர் படம் என, தன்னுடைய கெரியரை வளர்த்து கொள்ளும் விதமாகவே இவரது பட தேர்வுகள் உள்ளன.
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகன், அதீத கவர்ச்சியில் புகைப்படங்களை அவ்வப்போது புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அலற விடுகிறார்.
அந்த வகையில் தற்போது, பாரதி ராஜா ஹீரோயின்களுக்கு சவால் விடும் விதமாக ஜாக்கெட் போடாமல், புடவை மாராப்பை முறுக்கி கட்டிக்கொண்டு இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளம் நெஞ்சங்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.