Happy Birthday Kamal Haasan: 67-வது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள் இதோ!

Published : Nov 07, 2021, 10:57 AM IST

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சுமார் 60 வருடத்திற்கு மேல் திரையுலகில் சிம்மாசனம் போட்டு ரசிகர்கள் மனதில் அமர்ந்திருக்கும் நடிகர் கமல்ஹாசன் (Kamal Hassan) இன்று தன்னுடைய 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள் இதோ...  

PREV
111
Happy Birthday Kamal Haasan: 67-வது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள் இதோ!

நடிகர் கமல்ஹாசன் இந்திய திரையுலகின் மிக திறமையான மற்றும் சிறந்த நடிகர்களில் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே ஜனாதிபதியின் கையால் தங்கப் பதக்கத்தை வென்றவர். 5 வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், ஆகஸ்ட் 12 அன்று திரையுலகில் அடியெடுத்து வைத்த  62 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினார். இவரை பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளைத் தெரிந்து கொள்வோம் வாங்க...

 

211

கமல்ஹாசனின் உண்மையான பெயர் பார்த்தசாரதி, அவர் பரமக்குடியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை, சீனிவாசன் ஒரு வழக்கறிஞர் ஆவர், மற்றும் அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. தன்னுடைய 5 வயதில் நடிக்கத் தொடங்க தொடங்கிய இவர் தன்னுடைய தாய் தந்தைக்கு 5 ஆவது மகனாக பிறந்தவர்.

 

311

1959 இல் வெளியான 'களத்தூர் கண்ணம்மா' படத்திற்காக கமல் தனது 6 வயதில் விருதை வென்றார். அவர் ஒரு அனாதை குழந்தையாக அந்த படத்தில் நடித்திருந்தார். இதற்காக தான் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ஜனாதிபதியின் கைகளால் பெற்றார்.

 

411

இந்திய சினிமாவின் ராபர்ட் டி நீரோ என்று கருதப்படுகிறார் கமல். இவர் தன்னுடைய சிறிய வயதில் இருந்தே, நடிகர்  சிவாஜி கணேசன் நடிப்பாலும் மற்றும் ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ நடிப்பாலும் ஈர்க்கப்பட்டவர்.

 

511

கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 19க்கும் மேற்பட்ட பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். விஸ்வரூபம் படத்திற்காக, தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் இவர் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இதை தவிர மூன்று பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை கமல் பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அரசாங்கம் கமலுக்கு இந்தியத் திரையுலகில் சிறப்பான பங்களிப்பிற்காக ‘செவாலியர்’ விருதை வழங்கி கௌரவித்தது.

 

611

சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்த முதல் இந்திய நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.

 

711

1997 இல், டைம் இதழ் கமல் நடித்த 'நாயகன்' படத்தை, எல்லா காலத்திலும் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக பட்டியலிட்டது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

811

நடிப்பு தவிர, கமல் ஒரு சிறந்த பரத நாட்டிய கலைஞர், பாடகர், இயக்குனர், தொழில்நுட்ப வல்லுநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் மேக்கப் கலைஞர். மேக்கப் கலையை கற்க இவர் அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது.

 

911

2008ல் கமல் நடிப்பில் வெளியான 'தசாவதாரம்' படத்தில், 10 தனித்தனி வேடங்களில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனவே அதிக வேடங்களில் நடித்த பெருமை இவரையே சேரும் .

 

1011

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர் கமல். 2000 ஆம் ஆண்டில், கமல் ஃபிலிம்ஃபேருக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது, மேலும் அவரை இனி பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும், திரைப்படத் துறையில் இளம் திறமைகளை அங்கீகரிக்க குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

 

1111

தன்னுடைய 63 வயதில், கமல் தனது சொந்த அரசியல் கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை துவங்கினர். அறிவித்தார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொண்ட இவர், தற்போது வரை தன்னுடைய மனதில் படும் அரசியல் கருத்துக்களை உரக்க பேசி வருகிறார். அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

 

click me!

Recommended Stories