பெண்ணா... இல்லை தேவதையா? மஞ்சள் நிற சல்வாரில்... இளம் நெஞ்சங்களை அலைபாய விட்ட அதிதி ஷங்கர்!!

Published : Nov 06, 2021, 08:08 PM IST

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் (Aditi Shankar) தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள நிலையில், அழகில் அசர வைக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
16
பெண்ணா... இல்லை தேவதையா? மஞ்சள் நிற சல்வாரில்... இளம் நெஞ்சங்களை அலைபாய விட்ட அதிதி ஷங்கர்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், தற்போது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'விருமன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது நாம் அறிந்தது தான்.

 

 

26

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் மிக பிரமாண்டமாக போடப்பட்டது. இதில்  நடிகர் சூர்யா, ஜோதிகா,  இயக்குனர் ஷங்கர், இயக்குனர் முத்தையா, அதிதி ஷங்கர், பழம்பெரும் நடிகர் சிவகுமார், படத்தின் நாயகன் கார்த்தி என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

36

எம்.பி.பி.எஸ் மருத்துவரான அதிதி ஷங்கர், இந்த படத்தில் மிகவும் ஹோம்லியான பக்கா மதுரை தமிழ் பேசும் பெண்ணாக, நடிக்க உள்ளதாகவும், தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

 

 

46

மேலும் 'விருமன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை அதிதி கவர்ந்து விட்டதால் படம் வெளியாவதற்கு முன்பே இவருக்கான ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது.

 

 

56

இவரை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருவதாக ஒரு தகவல் வெளியானாலும், அதிதி முதல் படத்தில் நடித்து முடித்த பின்னரே மற்ற படங்களில் கவனம் செலுத்துவதில் உறுதியாக உள்ளாராம்.

 

 

66

இந்நிலையில் இவர் அழகில் ரசிகர்களை அரச வைக்கும் விதமாக, மஞ்சள் நிற சல்வாரில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories