Published : Feb 13, 2025, 02:48 PM ISTUpdated : Feb 13, 2025, 02:50 PM IST
சமீபத்தில், டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது, டோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன் - ராம் சரண் குடும்பத்தில் விழுந்த விரிசல்
ஆந்திரப் பிரதேச தேர்தல் நேரத்தில் இருந்தே, அல்லு மற்றும் மெகா குடும்பங்களுக்கு இடையே நல்ல உறவு இல்லை என்கிற தகவல் வெளியாகி வந்தது. சமீபத்தில் கூட தண்டேல் திரைப்பட நிகழ்விலும் அல்லு அர்ஜுன்
, சரணின் கேம் சேஞ்சர் பற்றி கருத்து தெரிவித்த நிலையில், பின்னர் இந்த கருத்துக்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.
25
ராம் சரண் உறவு முறையில் தனக்கு ஒரே மருமகன்:
பின்னர் ராம் சரண் உறவு முறையில் தனக்கு ஒரே மருமகன் என்றும், எனவே மகன் போன்றவர் என அல்லு அர்ஜுன் கூறினார். இது சத்தமில்லாமல் சென்று கொண்டிருந்த சில விவாதங்களுக்கு பதிலடி கொடுப்பது போல் அமைந்தது. இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை சரியாகிவிட்டது என ரசிகர்கள் பெருமூச்சு விட்ட நிலையில், இப்போது மீண்டும் இவர்களை பற்றி ஒரு தகவல் வெளியாகி டோலிவுட் திரையுலகை பரபரப்பாக்கி உள்ளது.
அதாவது, ராம் சரண்... அல்லு அர்ஜுனனை இன்ஸ்டாவில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இப்படி வெளியாகும் இந்த சர்ச்சைக்கு இதுவரை ராம் சரணும் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை. ராம் சரண், அல்லு அர்ஜுனை அன்ஃபாலோ செய்தது உண்மை என்று ஒரு தரப்பு விவாதித்து வரும் நிலையில், இதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கூறி மற்றொரு தரப்பும் தங்களின் கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.
45
மெகா vs அல்லு சலசலப்பு:
நெட்டிசன்கள் கொளுத்தி போட்டுள்ள இந்த சலசலப்பு காரணமாக மெகா vs அல்லு அர்ஜுனின் இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்க்கு பின்னணி தேர்தல் சமயத்தில் நடந்த குடும்ப சண்டை என்றே கூறப்படுகிறது. இரண்டு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை இப்போது இரண்டு தரப்பு ரசிகர்களின் விவாதங்களுக்கும் காரணமாக மாறியுள்ளது.
மேலும் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், மெகாஸ்டார் சிரஞ்சீவி புஷ்பா 2 படத்தை வெகுவாக பாராட்டினார். அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.