மறைந்த மகள் பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் இசைஞானி இளையராஜா!

Published : Feb 13, 2025, 12:56 PM IST

இசையமைப்பாளர் இளையராஜா,  மறைந்த தன்னுடைய மகள் பவதாரிணியின் நினைவாக, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற தற்போது களத்தில் இறங்கியுள்ளார். இதுகுறித்து நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவரே தெரிவித்துள்ளார்.  

PREV
15
மறைந்த மகள் பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் இசைஞானி இளையராஜா!
இளையராஜாவின் இசை குடும்பம்

இளையராஜாவின் குடும்பமே ஒரு இசை குடும்பம் எனலாம். இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரணி என மூவருமே இசைத்துறையில் தான் தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள். கார்த்திக் ராஜாவால் இசை துறையில் பெரிதாக சோபிக்க முடியாத நிலையில், தற்போது தன்னுடைய தந்தை இடமே பணியாற்றி வருகிறார். ஆனால் யுவன் சங்கர் ராஜா, இசையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.

25
தேசிய விருது பாடகி பவதாரிணி மறைவு

அதேபோல் கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் 25ஆம் தேதி புற்றுநோய் காரணமாக உயிரிழந்த இளையராஜாவின் மகள் பவதாரணி, தேசிய விருது பாடகியாகவும்,  இசையமைப்பாளராகவும் இசை துறையில் தன்னுடைய சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.

மறைந்த தங்கை பவதாரிணிக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு!


 

35
பவதாரிணிக்கு நினைவேந்தல்:

இந்நிலையில் பவதாரணியின் பிறந்த நாளான பிப்ரவரி 12ஆம் தேதி, அவருடைய திதியும் இணைந்து வருவதை தொடர்ந்து... இளையராஜா குடும்பத்தினர் சார்பில் அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக, நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா,  பவதாரணியின் கடைசி ஆசை பெண்களுக்காக ஒரு இசைக் குழுவை தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

45
மகள் ஆசையை நிறைவேற்ற இளையராஜா எடுத்த முடிவு :

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் மலேசியாவில் இருந்தபோது பல பெண்கள் என் முன்பு பாடினார்கள் அதை பார்த்ததும் தான் என் மகள் என்னிடம் சொன்ன அந்த விஷயம் நினைவுக்கு வந்தது. எனவே அவருடைய ஆசையை நிறைவேற்ற, கூடிய விரைவில் பெண்களுக்கான இசைக்குழுவை துவங்கப் போவதாக இளையராஜா அறிவித்துள்ளார்.

எஸ்பிபியுடன் மோதல்; இளையராஜாவின் மண்ட கர்வம்? பாடகர் வீரமணி கண்ணன் ஓபன் டாக்!

 

55
பெண்கள் இசை குழுவை துவங்கும் இளையராஜா:

இந்த இசைக் குழுவில் 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் இடம்பெறுவார்கள் என்றும், நானே அவர்களை தேர்ந்தெடுக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மலேசியாவில் இரண்டு இசை குழுக்களை தேர்ந்தெடுத்துள்ளேன். உலகில் எங்கிருந்தாலும் இந்த இசை குழுவில் பெண்கள் சேரலாம். இந்த இசைக்குழு, மக்களுக்கு என்றென்றும் இசை விருந்து அளிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆடிஷன் நடத்தப்பட்டு பாடகர் - பாடகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என இளையராஜா இந்த நிகழ்ச்சிகள் பேசி உள்ளார். இளையராஜாவின் இந்த முடிவு பலர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories