ஸ்லோ மோஷன் சீன் இல்லாம ரஜினியால் சினிமால பிழைக்க முடியுமா? பிரபல இயக்குனர் கேள்வி

Published : Feb 13, 2025, 12:37 PM IST

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த், ஸ்லோ மோஷன் சீன் இல்லாம அவரால் சினிமாவில் பிழைக்க முடியுமா என பிரபலம் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

PREV
14
ஸ்லோ மோஷன் சீன் இல்லாம ரஜினியால் சினிமால பிழைக்க முடியுமா? பிரபல இயக்குனர் கேள்வி
ரஜினிக்கு பிரபல இயக்குனர் கேள்வி

ஸ்லோ மோஷன் காட்சிகள் இல்லாம சினிமாவில் ரஜினிகாந்துக்கு பிழைக்க முடியுமான்னு தனக்கு சந்தேகம் இருக்குன்னு பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். சினிமாவில் நடிகருக்கும், ஸ்டாருக்கும் இருக்கிற வித்தியாசத்தை பற்றி விளக்கும்போது தான் ராம் கோபால் வர்மா இதை சொல்லியிருக்கார். பிங்க் வில்லாவுக்கு கொடுத்த பேட்டியில் தான் தான் அவர் இதைப் பற்றி பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

24
ரஜினியை விமர்சித்த ராம் கோபால் வர்மா

அந்த பேட்டியில் அவர் பேசியதாவது : "நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தை எப்படி வெளிப்படுத்துறாங்கன்னு தான். அதேசமயம் ஸ்டாரை பொறுத்தவரை அது ஒரு பர்ஃபாமன்ஸ். அது ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா? எனக்குத் தெரியல. பிகு மாட்ரே (ராம் கோபால் வர்மாவின் சத்யா படத்தில் மனோஜ் பாஜ்பாய் நடிச்ச கதாபாத்திரம்) கதாபாத்திரத்தை ரஜினிகாந்தால நடிக்க முடியும்னு எனக்குத் தோணல. 

இதையும் படியுங்கள்... ரஜினி கன்னட சினிமாவை கைவிட்டது ஏன்? நடிகர் அசோக் சொன்ன சீக்ரெட்!

34
ஸ்லோ மோஷன் சீன்தான் ரஜினிக்கு வரும்

ஸ்லோ மோஷன் இல்லாம ரஜினியால் சினிமாவில் பிழைக்க முடியுமான்னு எனக்குத் தெரியல. ஆனா, வேற எதுவும் பண்ணாம படத்தின் பாதி பகுதியில ரஜினிகாந்த் ஸ்லோ மோஷன்ல நடந்தாலும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அது உங்களை உற்சாகப்படுத்தும், ஆனா ஸ்டார்கள் ஒரு சாதாரண கதாபாத்திரத்தை நடிச்சா ரசிகர்களுக்கு அது ஏமாற்றத்தை கொடுக்கும் என ராம் கோபால் வர்மா கூறி இருக்கிறார். இவர் தமிழில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தை இயக்கியவர் ஆவார்.

44
அமிதாப் பச்சனையும் விட்டுவைக்காத ராம் கோபால் வர்மா

மேலும் அந்த பேட்டியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிச்ச படங்கள்ல தனக்குப் பிடிக்காத ஒரு காட்சியைப் பத்தியும் ராம் கோபால் வர்மா பேசி இருக்கிறார். "அமிதாப் பச்சனுக்கு வயிற்று வலி வர்ற ஒரு காட்சி அது. அந்த சீன் எனக்குப் பிடிக்கவே இல்லை. தெய்வ புருஷனாதான் நம்ம ஸ்டார்களை எப்பவும் பார்க்குறோம். அப்படிப்பட்டவங்களால கதாபாத்திரங்களா நடிக்க முடியாது"னு ராம் கோபால் வர்மா கூறினார். சர்கார், சர்கார் ராஜ் உள்பட ராம் கோபால் வர்மாவோட நிறைய படங்கள்ல அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 20 வருடங்களாக ரகசிய தியானம் செய்யும் ரஜினிகாந்த்; காரணம் என்ன தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories