ஓடிடியில் சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் புஷ்பா 2 - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Jan 28, 2025, 08:28 AM IST

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

PREV
14
ஓடிடியில் சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் புஷ்பா 2 - எப்போ ரிலீஸ் தெரியுமா?
புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ்

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவரை பான் இந்தியா ஹீரோவாக உயர்த்திய படம் புஷ்பா. இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டது. புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு ரிலீஸ் செய்தனர். இப்படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.

24
புஷ்பா 2 அல்லு அர்ஜுன்

புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் வில்லனாக பகத் பாசில் மிரட்டி இருந்தார். இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, பின்னணி இசையை சாம் சி.எஸ், தமன் ஆகியோர் அமைத்திருந்தனர். முதல் பாகத்தில் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடியதை போல் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒருபாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... பிரம்மாண்டத்தை வைத்து இனி பூச்சாண்டி காட்ட முடியாது! தமிழ் சினிமாவின் ஷாக்கிங் ரிப்போர்ட்

34
புஷ்பா 2 வசூல் சாதனை

ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை தொடங்கியது புஷ்பா 2 திரைப்படம். அதன்படி அப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.292 கோடி வசூலித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் முதல் நாளில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்ததில்லை. தொடர்ந்து 50 நாட்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து, அதிக கலெக்‌ஷன் அள்ளிய தென்னிந்திய படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

44
புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் தேதி

திரையரங்கில் சக்கைப்போடு போட்ட புஷ்பா 2 திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வர உள்ளது. அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 30ந் தேதி புஷ்பா 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதுவும் கூடுதல் காட்சிகளோடு அப்படம் ஓடிடிக்கு வருகிறது. மொத்தம் 3 மணிநேரம் 44 நிமிட படமாக நெட்பிளிக்ஸில் புஷ்பா 2 ரிலீஸ் ஆக உள்ளதாம். அதுமட்டுமின்றி அப்படம் எந்தவித போட்டியுமின்றி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 50 நாட்களில் இத்தனை சாதனைகளை தகர்த்ததா புஷ்பா 2? முழு லிஸ்ட் இதோ

click me!

Recommended Stories