பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைக்கும் புஷ்பா 2! 4 நாள் வசூல் நிலவரம் இதோ

Published : Dec 09, 2024, 09:55 AM IST

Pushpa 2 Box Office Collection : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
15
பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைக்கும் புஷ்பா 2! 4 நாள் வசூல் நிலவரம் இதோ
Pushpa 2

புஷ்பா 2

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். அவர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன புஷ்பா திரைப்படம் பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்து கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு கொண்டு வந்தனர். புஷ்பா 2 திரைப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகாவும், வில்லனாக பகத் பாசிலும் நடித்திருந்தனர்.

25
Pushpa 2 Allu Arjun

பிரம்மாண்ட வெளியீடு

புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. குறிப்பாக தமிழ் நாட்டில் நேரடி தமிழ் படத்துக்கு நிகராக சுமார் 800 தியேட்டர்களில் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. தமிழ் மக்களிடையே புஷ்பா 2 படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் அதை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்திருந்தனர்.

35
Allu Arjun, Rashmika

வசூல் வேட்டை

புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. இப்படம் முதல் நாளே உலகளவில் ரூ.294 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன்மூலம். இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது புஷ்பா 2. இதற்கு முன்னர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம் 232 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது.

இதையும் படியுங்கள்... கங்குவா கசக்குது; புஷ்பா 2-னா இனிக்குதா? பாரபட்சம் காட்டுகிறதா கோலிவுட்!

45
Pushpa 2 Box Office

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

முதல் நாளில் 294 கோடி வசூலித்த புஷ்பா 2 திரைப்படம் இரண்டாம் நாளில் ரூ.155 கோடி வசூலித்தது. அதேபோல் மூன்றாம் நாளிலும் வசூல் வேட்டையை தொடர்ந்த இப்படம் ரூ.172 கோடி வசூலித்து மூன்று நாட்களிலேயே 600 கோடி என்கிற இமாலய இலக்கை எட்டியது. இதையடுத்து நான்காம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரித்தது. அதன்படி நேற்று மட்டும் புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ.204 கோடி வசூலை அள்ளியதாம்.

55
Pushpa 2 Box Office Record

சாதனை

இதற்கு முன்னர் முதல் நாளில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய படங்கள் அதன்பின் எந்த ஒரு தினத்திலும் 200 கோடியை தாண்டியதில்லை. ஆனால் புஷ்பா 2 திரைப்படம் இரண்டாவது முறையாக ஒரே நாளில் 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதன்மூலம் தற்போது நான்கு நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இந்த வார இறுதிக்குள் இப்படம் ஆயிரம் கோடி வசூலையும் எட்ட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... ரசிகையின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் கொடுத்த 'புஷ்பா 2' அல்லு அர்ஜுன்!

Read more Photos on
click me!

Recommended Stories