Allu Arjun Fan Died During Pushpa 2 Premiere : புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகையின் குடும்பத்திற்கு உதவ நடிகர் அல்லு அர்ஜுன் முன் வந்துள்ளார்.
சினிமா நடிகர்களை கடவுள் போல் கொண்டாடும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், அதை எப்படியாவது முதல் நாளே பார்த்துவிட வேண்டும், அதற்கான டிக்கெட் எத்தனை ஆயிரத்துக்கு விற்றாலும் வாங்கி பார்த்துவிடும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவது இல்லை. இதற்கு ஒரு ரசிகரின் மரணம் தான் காரணம்.
24
Pushpa 2 Premiere
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின. அப்போது அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டபோது லாரி மீது ஏறி ஆட்டம் போட்ட அஜித் ரசிகர் ஒருவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழ்நாட்டில் எந்த ஒரு படத்துக்கும் அதிகாலை காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்படுவதில்லை. மேலும் உயிரிழந்த அந்த ரசிகருக்கு நடிகர் அஜித் எந்தவித உதவியும் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் தடை செய்யப்பட்டாலும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸ் ஆனது. இப்படத்தை பார்க்க ஆந்திராவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிகாலை காட்சியை காண கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.
44
Allu Arjun revathy Died during stamped at pushpa 2 premiere
அப்படி ஐதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க வந்திருந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் அல்லு அர்ஜுனின் காதுக்கு சென்றதும், அவர் உடனடியாக அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக உதவ முன்வந்துள்ளார். ரசிகர்கள் கடவுளே அஜித்தே என கொண்டாடியும் தன் ரசிகர் மரணத்துக்கு எட்டிக்கூட பார்க்காத அஜித்தை காட்டிலும் அல்லு அர்ஜுன் எவ்வளவோ பரவாயில்லை என நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.