தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், நடிப்பில் படு பிஸியாக நடித்து வந்தாலும், தன்னுடைய மனதுக்கு பிடித்த துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே கார் ரேஸ், போட்டோகிராபி, சமையல், ஏரோ மாடலிங் போன்ற பல துறையிலும் கலக்கி வந்த அஜித், தற்போது துப்பாக்கியை கையில் எடுத்துள்ளார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில், துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுப்பதில் கவனம் செலுத்தி வந்த அவர், தேசிய மற்றும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு கெத்து காட்டிவந்தார்.
குறிப்பாக சென்னை வேப்பேரி, பழைய கமிஷ்னர் அலுவலகத்தில் அமைந்துள்ள ரைபிள் கிளப்பில், அஜித் தினமும் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு வந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் பயிற்சி எடுக்கும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்நிலையில் தல அஜித், தமிழ்நாடு 40 வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் போட்டியில் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்றிருப்பதாக ஆதாரத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அஜித் ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். விரைவில் அஜித் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 'வலிமை' படத்தின் சண்டை காட்சிக்காக வெளிநாடு பறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் காலா படத்தில் நடித்த ஹீமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.