நடிகர் அஜித்தின் 62-வது படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விடாமுயற்சி படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது பிசியாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மே 22-ந் தேதி தொடங்க திட்டமிட்டு உள்ளனர். விடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் வித்தியாசமான லுக்கிற்கு மாறி உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இந்த பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதனால் ஐஸ்வர்யா ராய் தவிர மற்றொரு ஹீரோயினாக நடிகை திரிஷாவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலும் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.
நடிகைகள் ஐஸ்வர்யா ராயும், திரிஷாவும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பொன்னியின் செல்வன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் திறம்பட நடித்திருந்தார். அவர்கள் இருவரும் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விடாமுயற்சி திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் கதையம்சத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளாராம் மகிழ் திருமேனி. அதன்பின்னர் பின்னணி பணிகளை முடித்து படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு பிளான் போட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... புது கார் வாங்கிய ஜோரில்.! கார் மேல் படுத்து வளைய வளைய போஸ் கொடுத்த பிக்பாஸ் ரக்ஷிதா!