Valimai News: அஜித் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைத்த வதந்தி! உண்மையை வெளியிட்ட 'வலிமை' படக்குழு!

Published : Jan 01, 2022, 03:27 PM IST

அஜித் நடிப்பில் (AjithKumar) உருவாகியுள்ள வலிமை படம் (Valimai) எப்போது ரிலீஸ் ஆகும் என, படம் வெளியாகும் நாளை... எதிர்நோக்கி காத்திருக்க... திடீர் என இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது தற்போது இதுகுறித்து படக்குழு அடித்து பிடித்து உண்மை தகவலை வெளியிட்டுள்ளனர்.  

PREV
19
Valimai News: அஜித் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைத்த வதந்தி! உண்மையை வெளியிட்ட 'வலிமை' படக்குழு!

'நேர்கொண்ட பார்வை' (Nerkonda Paarvai) படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர், மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது முறையாக நடித்து முடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

 

29

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

 

39

அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இதுதவிர மற்றொரு முக்கிய கதாபாத்திரமான அஜித்தின் தம்பி வேடத்தில் ராஜூ ஐய்யப்பா நடித்துள்ளார்.

 

49

அமராவதி படத்தில் அஜித்தின் நண்பராக நடித்த பானு பிரகாஷின் மகன் தான் ராஜூ ஐயப்பா என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் இப்படத்திற்கு மேலும் வலிமை சேர்த்திருப்பது யுவன் தான்.

 

59

அவரின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர்.

 

69

வலிமை திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

79

அந்த வகையில் அண்மையில் வலிமை படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. அஜித் பேசும் ஒவ்வொரு வசனங்களும்... படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், அதன் பின்னணி இசையும் வேற லெவலில் இருந்தது என்றே சொல்லலாம்.

 

89

மேலும் படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்த தகவலையும் நேற்று படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், இன்று திடீர் என... இப்படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகாமல் தள்ளிப்போய் உள்ளதாக தீயாக ஒரு தகவல் பரவியது.

 

99

இதனால் வலிமை படத்தின் ரிலீசுக்கு காத்திருந்த ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, படக்குழு தரப்பில் இருந்து 'வலிமை' திரைப்படம் திட்டமிட்டபடி, ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதன் பின்னரே அஜித் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories