Valimai Update : ரிலீசுக்கு நாள் குறித்த அஜித்! உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் களைகட்டப்போகும் ‘வலிமை’ திருவிழா

First Published | Jan 30, 2022, 6:01 PM IST

கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வலிமை படத்தின் ரிலீஸ் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. 

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

Tap to resize

ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால். அந்த சமயத்தில் படத்தை வெளியிட முடியாமல் போனது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. வருகிற பிப்ரவரி 19-ந் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அவை முடிந்ததும் வலிமை படத்தை பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!